இலங்கை மோதலில் 52 பேர் பலி
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகள் சண்டை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், இலங்கை ராணுவ வீரர்கள் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் 52 பேர்பலியானார்கள்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில், யாழ்ப்பாணத்திலுள்ள கைத்தடி என்ற இடத்தில் ராணுவ வீரர்கள், புலிகள் மீதுதாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 30 விடுதலைப்புலிகளும், 22 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். 47 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்என்றார்.
முன்னதாக, 24 ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு சண்டை நிறுத்தம் செய்யப்போவதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். ஆனால் அதை இலங்கை அரசுநிராகரித்து விட்டது.
இதற்கிடையே, விடுதலைப் புலிகள் சண்டை நிறுத்தம் அறிவித்துள்ளதை, இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து அமைச்சர்பீட்டர் ஹெய்ன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கை ராணுவ வீரர்கள், புலிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் இலங்கையில், புலிகள், சண்டை நிறுத்தம் குறித்து இலங்கை அரசுக்குத்தெரிவிப்பதற்கு முன்பே பொதுமக்களுக்குத் தெரிவித்து விட்டதாக குறைபட்டுள்ளார்.
ராணுவத் தரப்பில் கூறுகையில், புலிகளின் சண்டை நிறுத்தம் குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். சண்டை நிறுத்தத்தை வரவேற்பது குறித்து இன்னும் இறுதிமுடிவு எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications