வீரப்பன் காட்டுக்குள் ஒரு துப்பாக்கிச் சூடு
கோவை:
கோவையில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுட்டவர்கள்வீரப்பன் கூட்டாளிகளாக என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை ஆனைகட்டியில் துப்பாக்கியால் சுட்ட காயங்களுடன் ஒருவர் காணப்பட்டார். இவரை அதிரடிப்படையினர் மற்றும் உளவுப் பிரிவினர் எடுத்து வந்துகோவை தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிப்பதுடன், தீவிர விசாரணையையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
கோவை - கேரள எல்லைப் பகுதியில் வசித்து வருபவர் மருதன். இவரின் கை, கால், தொடைப் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த காயங்களுடன்பிடிபட்டார். அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையின்போது இந்தக் காயங்களுடன் இருந்தவரிடம், போலீசார் விசாரணை செய்தனர்.
மலையோரக் கிராமத்தில் இவர் விவசாயம் செய்து வருகிறார். தனது நிலத்தில் சோளம் மற்றும் அவரை சாகுபடி செய்துள்ளார். இந்த நிலத்திற்கு அடிக்கடிகாட்டு விலங்குகள் வருவதால் இதனைத் தடுக்க நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தாராம். இந்த துப்பாக்கியை இவரது அண்ணன் தவறுதாலாக எடுத்துகையாண்டாராம். அப்போது மருதனின் உடலில் குண்டுகள் பாய்ந்ததாகக் கூறுகிறார்.
ஆனால், போலீசார் இந்தக் கதையை நம்ப மறுக்கின்றனர். இவரது உடலில் உள்ள காயங்கள் வீரப்பன் கூட்டாளிகள் யாராவது இவரைசுட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். எனவே, இவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு இவருக்குப்போடப்பட்டுள்ளது. உளவுத் துறை நிபுணர்கள் இவரிடம் வீரப்பன் குறித்த தகவல்கள் ஏதேனும் கிடைக்குமா என துருவித் துருவி விசாரணை செய்துவருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications