மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி?
டெல்லி:
மணிப்பூரில் இந்த வார இறுதிக்குள் ஆட்சி கலைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சிஅமல்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.
அரசியல் நெருக்கடி காரணமாக அம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்குசீர்குலைந்திருப்பதாலும், மாநிலத்திற்குள் தீவிரவாதிகள் அட்டாகாசம்அதிகரித்திருப்பதாலும் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தற்போது நாடாளுமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருப்பதால், அது முடிந்தவுடன்(வெள்ளிக்கிழமை முடிகிறது) மணிப்பூரில் ஆட்சிக் கலைப்பு உத்தரவுபிறப்பிக்கப்படலாம் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது ஆட்சிக் கலைப்பைஅமல்படுத்தினால், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும் என்பதால்கூட்டம் முடிந்ததும் ஆட்சியைக் கலைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக்கூறப்படுகிறது.
இந்த வாரத் துவக்கத்தில், மத்திய உற்துறை அமைச்சர் அத்வானி கூறுகையில்,மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று சூசகமாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனும், அத்வானி பேசினார்.நாடாளுமன்றத்தில் ஆட்சிக் கலைப்புக்கு ஒப்புதல் வாங்க வேண்டுமானால்,காங்கிரஸின் ஆதரவு முக்கியமானது. ராஜ்யசபையில் காங்கிரஸ் கட்சிக்குத்தான்பெரும்பான்மை பலம் உள்ளது.
இதற்கிடையே, டெல்லியில் வியாழக்கிழமை அத்வானியைச் சந்தித்த மணிப்பூர்கவர்னர் வேத் மார்வா, மாநில நிலைமை குறித்து எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில்,பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், ராணுவத் தளபதி சுந்தரராஜன்பத்மநாபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications