புலிகள் சண்டை நிறுத்தம்: இலங்கை நிராகரித்தது
கொழும்பு:
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள சண்டை நிறுத்தஅறிவிப்பை இலங்கை அரசு நிராகரித்து விட்டது.
இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில், யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.ராணுவ வீரர்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறார்கள் என்றார்.
முன்னதாக, விடுதலைப்புலிகள் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் கடந்த 17 வருடங்களாக நடந்து வரும் இனப்பிரச்சனைக்குத்தீர்வு காணும் வகையில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளோம் என்று கூறியிருந்தனர்.
இலங்கைக்கு நிதியுதவி செய்யும் நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிபர் சந்திரிகா பிரான்ஸ் சென்றுள்ளதால், புலிகளின் சண்டை நிறுத்த அறிவிப்புகுறித்து இலங்கை அரசு பின்னர் கருத்துத் தெரிவிக்கும் என்று இலங்கை வானொலி செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று இலங்கை அரசு அறிவித்திருந்த போதிலும், அமைதி ஒப்பந்தம்கையெழுத்தாகும் வரை யாழ்ப்பாணத்தில் ராணுவ வீரர்கள் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை அரசு ஏற்கனவே கூறியுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications