ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் பங்கேற்கிறார் ஜெயேந்திரர்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

மும்பையில் வருகிற 26-ம் தேதி நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் இயக்க அகில உலக மாநாட்டை தொடங்கி வைக்க, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள் 24-ம் தேதி மும்பை பயணமாகிறார்.

காஞ்சி காமகோடி பீடம் ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் மகாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

வருகிற 24-ம் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூர் செல்லும் ஜெயேந்திரர் அங்கு இந்தி மொழியில் ரமேஷ் ஒஸா என்ற புகழ்பெற்றசொற்பொழிவாளரால் நடத்தப்பட்டு வரும் ராமாயணத்தை முடித்து வைத்து ஆசி வழங்குகிறார்.

25-ம் தேதி பகல் 12 மணியளவில் புறப்பட்டு மும்பை அடைகிறார். 30-ம் தேதி வரை மும்பையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

26-ம் தேதி மாலை 4 மணியளிவில் கேசவ் சிருஷ்டி பயந்தர் என்ற இடத்தில் அகில உலக அளவிலான ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் 3வது மாநாடுதொடங்குகின்றது.

நூறு ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரம்மாணடமான பந்தலில் நடைபெறும் இம்மாநாட்டில் உலகின் 40 நாடுகளில் இருந்து ஐந்து லட்சம் பேர் கலந்துகொள்கிறார்கள். இந்த மாநாட்டை காஞ்சி காமகோடிபீடம் ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் தொடங்கி வைத்து ஆகி வழங்குகிறார்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த அகில உலக மாநாடு ஜனவரி ( 2001) 1-ம் தேதி முடிகிறது. அசோக் சிங்கால், பால்தாக்கரே உள்படமுக்கிய பிரமுகர்களும் , மத்திய அமைச்சர்களும் மாநாட்டில் பங்கு கொள்கிறார்கள்.

27-ம் தேதி காலை பத்து மணியளவில் நகராட்சி மருத்துவமனைக்கு ஐம்பது லட்சம் செலவில் எக்ஸ்ரே உள்ளிட்ட பல்வேறு மருத்துவக் கருவிகளைவழங்குகிறார். 28-ம் தேதி மும்பை அருகே நெரூல் என்ற இடத்தில் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக் கவசத்தை சாற்றுகிறார்.

28-ம் தேதி மாலை ஆறு மணிக்கு சியோனில் உள்ள சண்முகானந்தா, சந்திர சேகரேந்திர சரஸ்வதி சபாவில் நடக்கும் விருது வழங்கும் விழாவில்சுவாமிகள் கலந்து கொண்டு முன்னாள் பிரதமர் பி.வி.நிரசிம்மராவ், பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமி, ரமேஷ் பாய் ஓசா, ராம் நாராயண் அகர்வால்ஆகியோருக்கு சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயரில் விருதுகள் வழங்குகிறார்.

நெரூரில் மாநிலம் தழுவிய பசு பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே உள்பட பல்வேறு தலைவர்கள் இந்தமாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

நெரூரில் உள்ள ஒரு தெருவுக்கு ஆதி சங்கரர் பெயர் சூட்டப்படுகிறது. இந்த தெருவை ஜெயேந்திரர் திறந்து வைக்கிறார். 29-ம் தேதி கன்யா பரமேஸ்வரிகோவில், மஹாலட்சுமி கோவில்களுக்கு சென்று அம்மனை தரிசிக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+