டெல்லி செங்கோட்டையில் தீவிரவாதிகள் தாக்குல்
டெல்லி:
டெல்லி செங்கோட்டை வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர். இதையடுத்து செங்கோட்டைப் பகுதியில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகள்தான்தாக்குதலில் ஈடுபட்டதாக புலனாய்வுத் துறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. காஷ்மீரில் இந்தியாஅறிவித்துள்ள சண்டை நிறுத்தத்தை இந்த அமைப்பு எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் இந்த அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள்செங்கோட்டைக்குள் புகுந்தனர். பின்னர் அங்கு காவலுக்கு இருந்த ராஜ்புத் பிரிவு மற்றும் ஜாட் பிரிவைச் சேர்ந்தராணுவ வீரர்களை துப்பாக்கி முனையில் பிடித்தனர். அவர்களை உள்ளே வைத்து சரமாரியாக சுட்டனர்.
அங்கிருந்த ராணுவ நிலைகள் மீதும் தீவிரவாதிகள் சுட்டனர். இதில் 3 ராணுவ வீரர்கள் இறந்தனர். 2 பேர்காயமடைந்தனர். உள்ளே ஒரு பிரிவு தீவிரவாதிகள் துப்பாக்கித் தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது,இன்னொரு பிரிவு தீவிரவாதிகள் செங்கோட்டைப் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
டெல்லியில், ராணுவ நிலைகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறையாகும். இதையடுத்துடெல்லியில் அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டெல்லிக்கு வரும் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டு, தீவிரசோதனை நடத்தப்பட்டு வருகின்றன. செங்கோட்டைப் பகுதியும் மூடப்பட்டு விட்டது.
சண்டை நிறுத்த அறிவிப்பு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் வாஜ்பாய் அறிவித்த 2 நாட்களில் தீவிரவாதிகள், பலத்தபாதுகாப்புடன் உள்ள தலைநகர் டெல்லியில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாதிகள் டெல்லிக்குள் நுழையலாம் என்று புலனாய்வுத்துறை அதிகாரிகள், காவல்துறையினருக்கு ஏற்கனவேதகவல் கொடுத்ததாகவும், ஆனால் அதை காவல்துறை கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்க டெல்லி காவல்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள செங்கோட்டை 17-வது நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications