மூலிகை பெட்ரோல்: காப்புரிமையை விற்றார் ராமர்
சென்னை:
மூலிகைப் பெட்ரோல் தயாரித்ததாகக் கூறி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டராமர் பிள்ளை, அந்த பெட்ரோலைத் தயாரிப்பதற்கான காப்புரிமையை, ராஷ்ட்ரியசுயம் சேவைக் அமைப்பிடம் கொடுத்துள்ளார்.
மூலிகைச் சாறிலிருந்து பெட்ரோல் தயாரிப்பதாகக் கூறி வந்தார் ராமர் பிள்ளை. அவரதுபெட்ரோல், உண்மையிலேயே பெட்ரோல்தானா என்று பல்வேறு இடங்களில்பரிசோதிக்கப்பட்டது. இறுதியில் அது போலி பெட்ரோல் என கண்டுபிடிக்கப்பட்டது.இருந்தாலும் தொடர்ந்து தனது கண்டுபிடிப்பை நியாயப்படுத்தி வந்தார் ராமர் பிள்ளை.இறுதியில், அதை உற்பத்தி செய்து விற்கவும் ஆரம்பித்தார். இந்த நிலையில் அவரைசி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ளார்.
இந்த நிலையில், தனது மூலிகை பெட்ரோலுக்கான காப்புரிமையை சென்னை மாவட்டஆர்.எஸ்.எஸ். தலைவர் சம்பத்குமாரிடம் ஒப்படைத்துள்ளார் ராமர்.பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. சம்பத்குமார்,உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சம்பத்குமார் கூறுகையில், ராமர் பிள்ளையின் பெட்ரோல், உண்மையானபெட்ரோலை விட சக்தி வாய்ந்தது. அதிக தூரத்திற்கு இது வாகனங்களைஇயக்கவல்லது.
தேச நலன் கருதி இந்த பெட்ரோல் தயாரிக்கும் காப்புரிமையை எங்கள் இயக்கம்வாங்கியுள்ளது. பணம் பார்ப்பதற்காக இதை ஆர்.எஸ்.எஸ். செய்யவில்லை.
இதை வாங்கவும், விற்கவும் மூன்று நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இவற்றில் ஒன்றுஅமெரிக்காவைச் சேர்ந்தது. மற்ற நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை.
தற்போது ராமர் பிள்ளை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்துள்ளார். அவரதுபெட்ரோலை விற்பது தொடர்பாக தேசிய அளவில் முடிவு எடுக்கப்பட்டு நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மட்டுமே எனது கண்டுபிடிப்பை அங்கீகரித்து அதை வாங்கமுன்வந்தது. எனவேதான் அதனிடம் இந்த பெட்ரோல் தயாரிப்புக்கானகாப்புரிமையைக் கொடுத்தேன் என்று ராமர் பிள்ளை கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications