தாமரைக்கனிக்கு சிறை .. நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை:
சட்டசபையில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் அ.தி.மு.க.எம்.எல்.ஏ. தாமரைக்கனிக்கு15 நாட்கள் சிறை தண்டனை விதித்து செல்லும் எனசென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்ற ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி தமிழக சட்டசபையில் அமைசச்ர் வீரபாண்டிஆறுமுகத்துக்கும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தாமரைக்கனிக்கும் இடையே நடந்தவாக்குவாதம் சர்ச்சையாக மாறியது. இதில் தாமரைக்கனி அமைச்சர் வீரபாண்டிஆறுமுகத்தை தாக்கினார்.
இது தொடர்பாக தாமரைக்கனியை கைது செய்து 7 நாடக்ள் காவலில் வைக்குமாறுசபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் உத்தரவிட்டார். அதன் படி தாமரைக்கனிகைது செய்யப்பட்டு 2 நாள் காவலில் இருந்தார்.
அதற்கு அடுத்த நாள் தாமரைக்கனியை 15 நாள் காவலில் வைக்க சட்டசபையில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து தாமரைக்கனி சார்பில் அ.தி.மு.க.எம்.பி. ஓ.எஸ்.மணி சென்னை நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல்செய்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் பத்மநாபன், தங்கவேலு அடங்கிய டிவிஷன் பெஞ்ச்தாமரைக்கனியை சிறையில் அடைக்க சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும். இதுஅடிப்படை உரிமையை கூறுவதாக அமையாது.
மார்ச் மாதம் 23-ம் தேதியும் அதற்குப் பிறகும் தாமரைக்கனியை சிறையில் அடைத்ததுசெல்லும். மேலும் மீதி நாட்களும் அவர் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்,இதை கழிக்க அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என தீர்ப்பு கூறினர்.
இதை எதிர்த்து அப்பீல் செய்ய 4 வாரங்கள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்என தாமரைக்கனியின் சார்பில் அவரது வக்கீல் கோரினார். அதை டிவிஷன் பெஞ்ச்நிராகரித்தது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications