5 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் அமெரிக்காவில் நிறைவேற்றம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் சுமார் 5 லட்சம் பேருக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து தர வகைசெய்யும் சட்டம் அமெரிக்க நாடாளுமன்ற காங்கிரஸ் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் முறையான அங்கீகாரம் இல்லாமர் சுமார் 5 லட்சம் பேர் வரை தங்கியருக்கிறார்கள். இவர்களில்பலர் 10 ஆண்டுக்கும் மேலாக இவ்வாறு தங்கியிருக்கிறார்கள். புதிய சட்டத்தின் மூலம், இவர்களுக்குசட்டப்பூர்வமாக குடியுரிமை அந்தஸ்து கிடைக்கும்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் சபையில் 292 ஓட்டுக்கள் சட்டத்திற்கு ஆதரவாக கிடைத்தது. 60ஓட்டுக்கள் எதிர்த்து போடப்பட்டன. செனட் சபையிலும் இது குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications