அசார் வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்
ராஜ்காட்:
இந்திய கிரிக்கெட் வீரர்கள் அசாருதீன், அஜய் ஜடேஜா உள்ளிட்ட பல வீரர்கள் மீது பதிவு செய்த வழக்கை விசாரித்த ராஜ்காட் போலீசார் பலஉண்மைகளை கண்டறிந்துள்ளனர்.
ராஜ்காட்டில் இருக்கும் சஞ்சய் வியாஸ் என்ற வக்கீல் இந்திய கிரிக்கெட் வீரர்களான அசாருதீன், ஜடேஜா உள்ளிட்ட பலர் மீது டிசம்பர் 12-ம் தேதிவழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த ராஜ்காட் போலீசாருக்கு பல உண்மைகள் தெரிய வந்துள்ளன.
சஞ்சய் வியாஸ் என்ற வழக்கறிஞர் கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்களை ஏமாற்றியதாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் இது குறித்து கூறுகையில், நான் தொடர்ந்த வழக்கு நியாயமானது. அரசு இந்த வீரர்களிடமிருந்து அர்ஜூனா விருதை திரும்பப் பெற முடிவுசெய்திருப்பதிலிருந்து இது உறுதியாகிறது. அவர்கள் நாட்டு மக்களை ஏமாற்றியதும் உறுதியாகிறது.
இந்த வழக்கை இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு ராஜ் காட் போலீஸ் கமிஷனரை கேட்டுக் கொள்கிறேன். அவர் என்வேண்டுகோளின் படி செயல்படுவார் என நம்புகிறேன் என கூறினார்.
தொலைபேசி கட்டணம்:
அசார் தங்கியிருந்த ஓட்டலை போலீசார் சோதனையிட்ட போது அசாருதீன் தொலைபேசி கட்டணமாக ரூ 4, 600 கட்டியிருப்பது தெரிய வந்துள்ளது எனராஜ்காட்டின் போலீஸ் கமிஷனர் சுதீர் சின்கா தெரிவித்துள்ளார்.
போலீஸ் கமிஷனர் சின்கா தட்ஸ்கிரிக்கெட்.காம் தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது:
ராஜ்காட் போலீசார் டிசம்பர் 14-ம் தேதி இந்திய - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற 5 -வது ஒரு நாள் போட்டியின் போதுவெங்கடேஷ் பிரசாத்தையும், சுனில் ஜோஷியையும் 1996-ம் ஆண்டு ராஜ்காட்டில் தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்தியா விளையாடிய போட்டி குறித்துவிசாரித்தனர்.
இவர்கள் இருவரும் 1996-ம் ஆண்டு விளையாடிய அணியில் இடம் பெற்றிருந்தனர். இந்த போட்டி சி.பி.ஐ.-ன் அறிக்கைப்படி ஃபிக்ஸ் செய்யப்பட்டபோட்டியாகும்.
இதனால் இந்த போட்டியில் விளையாடிய பிரசாத்திடமும், ஜோஷியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இவர்களிடம் அதிகார பூர்வமாக விசாரணைநடத்தப்படவில்லை. இவர்கள் இருவரும் நிச்சயம் குற்றமற்றவர்கள். இவர்கள் கூறிய விவரங்கள் கூட பதிவு செய்யப்படவில்லை
விசாரணை நடத்திய அதிகாரிகள் சில ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். அவை மேற்கொண்டு விசாரணை செய்ய உதவும். சி.பி.ஐ. அறிக்கையை படித்துமேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது குறித்து இரண்டு நாட்களில் முடிவெடுப்போம்.
ராஜ்காட் போலீசார் சச்சின் டெண்டுல்கரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என எண்ணியிருந்தார்கள். அவர் 1996-ம் ஆண்டில் இந்திய அணியின் தலைவராகஇருந்ததால் அவரிடம் விசாரணை நடத்த எண்ணினர். ஆனால் ஜிம்பாப்வேயுடனான போட்டிக்கு முன்பு இவரிடம் மேட்ச் ஃபிக்சிங் குறித்து அவரிடம் விசாரிக்கவேண்டாம் என முடிவு செய்து விசாரணை எண்ணத்தை கைவிட்டனர் என கூறினார்.
இந்த வழக்கு பதிவு செய்ய்பட்ட பின் ராஜ்காட் போலீசார் 1996-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தங்கியிருந்த சில்வர் பேலஸ் ஹோட்டலில் இந்தியவீரர்கள் அங்கு தங்கியிருந்த போது வேறு யாரெல்லாம் அவர்களோடு தங்கியிருந்தார்கள் என அறிந்து கொள்ள அந்த ஹோட்டலின் பதிவேடுகளைசோதனையிட்டனர்.
அப்போது அசாருதீன் தொலைபேசி கட்டணமாக மட்டும் ரூ 4,600 கட்டியிருப்பதும், மொபைல் ஃபோன் கட்டணத்தையும் சேர்த்தால் அது ரூ 25,000-க்கும் அதிகமானது கண்டும் போலீசார் திகைப்புக்குள்ளானார்கள்.
ஜடேஜாவுடன் பெண்?
இந்நிலையில் போலீசார் ஜடேஜாவுடன், டிம்பிள் என்ற பெண் தங்கியிருந்தார் என கூறப்படுவதையும் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்திய அணியினர் தங்கியிருந்தபோது அவரின் பெயர் ஓட்டல் பதிவேட்டில் ரூம் எண் 105-ல் தங்கியிருந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
டிம்பிள் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. போலீசார் அவரை விசாரித்து அவர் கூறியவற்றை பதிவு செய்து வைத்துள்ளனர். ஆனால்அது குறித்த விவரம் எதையும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
இதுதவிர போலீசார் ஹிரன் ஹாதி என்பவரை விசாரிக்க அகமதாபாத் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இவர் இந்திய அணியினர் தங்கியிருந்த அதேஹோட்டலில் இந்திய அணியினர் தங்கியிருந்த போது தங்கியிருந்தார் என்ற காரணத்தாலும், இவர் ஜடேஜாவுக்கும், கபில்தேவுக்கும் நெருங்கிய நண்பர் எனகருதப்படுவதாலும் அவரை விசாரணை செய்ய விரும்பினர்.
சில மாதங்களுக்கு முன்னால் இவரது வீடு வருமானவரித்துறை அதிகாரிகளால் சோதனை செய்ய்ப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
