ஈரோட்டில் மென்பொருள் பூங்கா அமைக்க கோரிக்கை
ஈரோடு:
ஈரோட்டில் மென்பொருள் பூங்கா அமைக்க வேண்டும் என கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை தீர்மானம்நிறைவேற்றியது.
ஈரோட்டில் கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையின் சார்பில் பேரணி மற்றும் 5 வது மாநில மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கொங்கு வேளாளக் கவுண்டர் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கும் சட்டத்தை நீக்கி,அனைவருக்கும் சம நீதி வழங்கும் வகையில் சட்டத்தைத் திருத்தி அமைக்க வேண்டும்.
விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் பாண்டியாறு புன்னம்புழாத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றவேண்டும்.
கடனில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் நிலத்தை ஜப்தி செய்யக் கூடாது. விவசாயத்தை தொழிலாக அங்கீகரிக்கவேண்டும். சாயக் கழிவுகளால் விவசாயம் பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஈரோட்டில்மென்பொருள் பூங்கா ஒன்றை நிறுவ வேண்டும்.
அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி வாரியாகக் கணக் கெடுப்பு நடத்த வேண்டும்.
ஈரோட்டைத் தலைமையகமாகக் கொண்டு, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்களுக்கு தனி ரயில்வேடிவிஷன் அமைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications