209 போலி அடையாள அட்டைகள் கண்டுபிடிப்பு
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதியில் 209 போலி வாக்காளர் அடையாள அட்டை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர்களதுபெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம்:
சைதாப்பேட்டை சட்டமன்ற பேரவைத் தொகுதியில் அண்மையில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கபுகைப்படம் எடுத்தவர்கள் பற்றி தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி நேரடி மறு ஆய்வு நடத்திய பொழுது 209புகைப்படம் எடுத்த நபர்கள் அவர்கள் கொடுத்த முகரியில் இல்லை என கண்டறியப்பட்டன.
1960-ம் ஆண்டின் வாக்காளர் பதிவுச் சட்டப்பிரிவு 21ஏ-ன் படி இவர்களது பெயரை வாக்காளர் பட்டியலில்இருந்து நீக்கம் செய்து அவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை ஏன் ரத்து செய்யக் கூடாது?என்பதற்காகன அறிவிப்பு அனுப்பப்பட்டது.
இந்த 209 நபர்களின் பெயர் பட்டியல் சைதாப்பேட்டை ரிச்சர்ட் பார்க்கில் உள்ள மாநகராட்சி மண்டலஅலுவலகத்தில் சென்னை 15-ல் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை செவ்வாய்கிழமையும், புதன் கிழமையும் மற்றும் வியாழக்கிழமையும் வாக்குப்பதிவுஅலுவலரால் காலை பத்து மணி முதல் நடத்தப்பட உள்ளது என்பது தெரியப் படுத்தப்படுகின்றது.
எனவே சைதாப்பேட்டை சட்டமன்ற பேரவைத் தொகுதியில் செப்டம்பர் மாதத்தில் புகைப்பட அடையாள அட்டைபெற்ற வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா இல்லையா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.
இப்பட்டியலில் இடம் பெற்றிருப்பின் தங்கள் இருப்பிட முகவரி குறித்து சான்று ஆவணங்களை கொண்டு வந்துவிசாரணையின் பொழுது தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பட்டியலில் உள்ள நபர்கள் விசாரணைக்கு ஆவணங்களுடன் ஆஜராகாத பட்சத்தில் அவர்களின் பெயர் மறுஅறிவிப்பின்றி வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்படும். அவர்களுக்க அடையாள அட்டை ரத்து செய்யப்படும்என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications