சீன முன்னாள் பிரதமர் இந்தியா வருகிறார்
டெல்லி:
இந்தியா, சீனா நல்லுறவை மேம்படுத்தும் வகையில் சீன முன்னாள் பிரதமரும், கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவருமான லீ பெங் ஜனவரியில் இந்தியாவருகிறார்.
பொக்ரானில் அணு குண்டு வெடித்ததைத் தொடர்ந்து இரு நாட்டு நல்லுறவிலும் சிறிது தேக்கம் ஏற்பட்டிருந்தது. தற்போது அதை சமன்படுத்தும் வகையில்சீன தலைவரின் வருகை அமையும் என்று கருதப்படுகிறது.
சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில், ஜனவரி மாதம் எப்போது இந்தியாவுக்கு லீ பெங் வருவார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுசெய்யப்படும் என்றார். இந்தியா வரும் லீ பெங், பிரதமர் வாஜ்பாய் மற்றும் பிற அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் சீனா சென்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் டேங்க் ஜியாசுவனைச் சந்தித்துப் பேசினார்.இதையடுத்து இரு தரப்பு உறவுகளும் வலுப்பட்டுள்ளது என்றே கூறலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications