ஆசியரைப் போல தோற்றமளித்தவர் ஜெர்மனியில் கொலை
குபான் (ஜெர்மன்):
ஜெர்மன் நாட்டில் புதிய நாஜிக் கட்சியைச் சேர்ந்த மூன்று பேர், ஆசியரைப் போல தோற்றமளித்த ஒரு இளைஞரை திங்கள்கிழமை அடித்துக் கொன்றனர்.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், ஜெர்மன் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள குபான் டவுனில் ஆசியாவைச் சேர்ந்தவர் போல் தோற்றமளித்தஒருவரை 3 பேர் அடித்துக் கொன்றனர். இந்தக் கொலையில் சம்பந்தமுடைய 16 முதல் 19 வயது வரையுள்ள 3 பேரைக் கைது செய்துள்ளோம்.
மூன்று பேரும், கொலை செய்யப்பட்டவரின் முகத்தில் கத்தியால் குத்தியிருக்கிறார்கள். அவரை அடித்த காயங்களும் உள்ளன. கொலை செய்யப்பட்டவரின்முகத்தில் 3 சென்டி மீட்டர் அளவுக்கு காயங்கள் உள்ளன என்றனர்.
ஜெர்மனியில் அரசியல் புகலிடம் கோரி தஞ்சமடைந்த அல்ஜீரியாவைச் சேர்ந்த ஓமர் பென் நூவி கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி இனவெறியர்களால்கொல்லப்பட்டார். அந்தக் குழுவைச் சேர்ந்தவர்களில் ஒருவரும், தற்போதைய கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவருக்கு, அல்ஜீரியர் கொலை வழக்கில் தண்டனையாக 200 மணி நேரம் தொடர்ந்து சமூக சேவை செய்ய நவம்பர் மாதம் உத்தரவிடப்பட்டது.
குபான் நகரில் நூவிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் தான் அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது என்றுபோலீஸார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications