கருணாநிதியை சந்திக்கிறார் கண்ணன்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கண்ணன் தமிழக முதல்வர்கருணாநிதியை சந்தித்து பேசவிருப்பதாக கூறியுள்ளார்.
டெல்லி சென்றுவிட்டு திரும்பிய கண்ணன் செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்குபேட்டியளித்தார். பேட்டியில், டெல்லியில் மத்தியஅமைச்சர் வெங்கையா நாயுடுவைசந்தித்து பாண்டிச்சேரி அரசியல் குறித்து பேசினேன்.
மீண்டும் டெல்லி சென்று பிரதமர் உள்ளிட்ட பாரதிய ஜனதா தலைவர்களை சந்தித்துபேசுவிருக்கிறேன்.
நான் எந்தக் கட்சியிலும் நான் சேரப் போவதில்லை. எங்கள் ஆதரவாளர்கள்தொடங்கியுள்ள பாண்டிச்சேரி மக்கள் காங்கிரசில் சேருவேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் சேர்ந்தால் அந்த கூட்டணிக்கு யார் தலைமைஏற்பது என்பதை தலைவர்கள் வாஜ்பாயும், கருணாநிதியும் முடிவு எடுக்க வேண்டும்,
மத்திய அமைச்சர் முரசொலி மாறனையும், தமிழக முதல்வர் கருணாநிதியையும் சந்தித்துபேசவிருக்கிறேன்.
ஏற்கனவே பாரதீய ஜனதா கட்சியின் இல.கணேசன், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எனக்கு ஆதரவுதெரிவித்துள்ளது. எங்களுக்கு நேசக்கரம் நீட்டும் எல்லோர் ஆதரவையும் ஏற்றுக்கொள்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications