காஷ்மீர் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் சாவு
ஸ்ரீநகர்:
வடக்கு காஷ்மீரில் உள்ள ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள்சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் நான்கு வீரர்கள் இறந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு ராணுவத்தின் 32-வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த வீரர்கள், லோலாப்அருகே உள்ள போஷ்தார் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மலைப் பாங்கான பகுதி இது.
இவர்கள் மீது தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு ராணுவவீரர்கள் இறந்தனர். ஜூனியர் அதிகாரி உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு அல் பாதர் முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்புபொறுப்பேற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவது இந்த மாதத்தில் இது 2-வதுமுறையாகும். திங்கள்கிழமை ஸ்ரீநகரில் நடந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications