தமிழர் படுகொலை .. 2 ராணுவ வீரர்கள் அடையாளம் கண்டுபிடிப்பு
கொழும்பு:
இலங்கையில் 5 வயது சிறுவன் உள்பட 8 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 2 ராணுவ வீரர்களை, அவர்களிடமிருந்து தப்பிய தமிழர்அடையாளம் காட்டினார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சாவகச்சேரி அருகிலுள்ள மிர்சுவில் கிராமத்தில் கடந்த டிசம்பர் 20 ம் தேதி 8 தமிழர்கள், ராணுவ வீரர்களால் கொல்லப்பட்டனர்.இதுதொடர்பாக 9 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
8 பேர் கொல்லப்படும் போது அங்கிருந்து தப்பித்துச் சென்ற சென்ற பொன்னுதுரை மகேஸ்வரன் என்ற தமிழர் தற்போது அந்தப் படுகொலையில்சம்பந்தமுடைய 2 இலங்கை ராணுவ வீரர்களை அடையாளம் காட்டியுள்ளார்.
மகேஸ்வரன் கொடுத்தத் தகவல்படி போலீஸார், இறந்தோரது சடலங்களை மிர்சுவில் கிராமத்திலிருந்து கைப்பற்றினர். சடலங்கள் மிகவும் அழுகிய நிலையில்இருந்தன. ராணுவ வீரர்களால் கொலை செய்யப்பட்ட 8 தமிழர்களில் 4 பேர் தந்தை, மகன்கள். ஒருவர் 5 வயது சிறுவன். மீதி மூன்று பேர் 19 முதல் 21வயதுக்கு உட்பட்டவர்கள்.
மகேஸ்வரன் கூறுகையில், மிர்சுவில் கிராமத்தில் உள்ள எங்களது வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்த போது ராணுவ வீரர்கள் எங்களை நோக்கித்தாக்குதல் நடத்தினார்கள். இதில் நான் தப்பித்து வந்து விட்டேன் என்றார்.
ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்கள் படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடைய 9 ராணுவ வீரர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் அவர்கள் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அவர்கள் மேல் விசாரணை நடந்து வருகிறதுஎன்றார்.
முன்பு, பள்ளி மாணவியை கற்பழித்துக் கொலை செய்து, அவரின் தாய், சகோதரர், நண்பர் ஆகியோரையும் கொலை செய்தது தொடர்பாக 1996 ம் ஆண்டு 6ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவத்துக்குப்பின் ராணுவ வீரர்கள் தற்போது மீண்டும் கொலைச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications