போலி பாஸ்போர்ட் .. சிங்கப்பூரில் 3 இலங்கைத் தமிழர்கள் கைது
சிங்கப்பூர்:
போலி பாஸ்போர்ட்டுடன் வந்த நான்கு 3 இலங்கைத் தமிழர்கள் உள்பட நான்கு பேரை சிங்கப்பூர் போலீஸார்விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்தனர்.
சாங்கி விமான நிலையத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். நியூயார்க் நகரைச் சேர்ந்த எட்வின் வதனா (24),குமுதரியா சுப்ரமணியம் (20), துரைரத்னம் ஹரன் (32), காங்கேசன் சிவக்குமார் (22) ஆகியோர் கைதுசெய்யப்பட்டவர்கள். தனித்தனிச் சம்பவங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நியூயார்க்கைச் சேர்ந்த எட்வின் வதனா, போலியான பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூர் வந்தார். சாங்கி விமானநிலையத்தில் அவரிடம் சோதனை செய்தபோது, இது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
மற்றொரு சம்பவத்தில், மூன்று இலங்கைத் தமிழர்களும், ஒரு சிங்கப்பூர் வாசியும் கைது செய்யப்பட்டனர்.இலங்கைத் தமிழர்கள் மூன்று பேரும், போலி பாஸ்போர்ட் மூலம் சாங்கி விமான நிலையம் வந்தபோதுபிடிபட்டனர்.
சிங்கப்பூர் சட்டப்படி, போலி பாஸ்போர்ட் பயன்படுத்தினால் அவர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனைவிதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications