கொலையான தமிழர்களின் கழுத்தில் காயம் கண்டுபிடிப்பு
கொழும்பு:
இலங்கையில் உள்ள மிர்சுவில்லில் ராணுவ வீரர்களால் கொலை செய்யப்பட்ட 8 தமிழர்களின் கழுத்துக்களில் ஆழமான காயங்கள் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் டிசம்பர் 19 ம் தேதி மிர்சுவில் கிராமத்துக்குச் சென்ற 8 பேரைக் காணவில்லை என்று அவர்களது உறவினர்கள் போலீஸில் புகார்கொடுத்திருந்தனர். இதற்கிடையே கிறிஸ்துமஸ் தினத்தன்று காணாமல் போன 8 தமிழர்களின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. இறந்தவர்களில் மூன்று பேர்ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் கொலை தொடர்பாக 8 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ராணுவ அதிகாரி. இந்தக் கொலை மிகவும்கொடூரமாக நடந்துள்ளது என்று போலீஸார் கண்டுபிடித்தனர். பின்னர் மிகவும் அழுகிய நிலையில் இருந்த தமிழர்களின் சடலங்களின் பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் இன்னும் அதிகமான தமிழர்களின் பிணங்கள் கண்டு பிடிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இறந்த தமிழர் ஒருவரின் மனைவி ஜேசுதா கூறுகையில், நாங்கள் தெய்வக்குளசிங்கத்தைச் சேர்ந்தவர்கள். என் கணவர் மிர்சுவில்லுக்குச் சென்றார். அவர் ஒருவாரமாகத் திரும்பிவரவில்லை. அவரைக் காணவில்லை என்று போலீஸாருக்குத் தகவல்கள் கொடுக்கப்பட்டது. இறுதியில் அவரது சடலத்தைத்தான்கண்டு பிடிக்க முடிந்தது என்றார்.
தற்போது இந்தச் சம்பவம் குறித்து, ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸார் ஆகியோர் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையேகண்டுபிடிக்கப்பட்ட 8 பேரின் கழுத்துக்களில் ஆழமான காயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் 8 பேர் கொலையில் நாளுக்குநாள் திடுக்கிடும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications