காஷ்மீரில் சண்டை நிறுத்தத்தை மீறி 168 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

இஸ்லாம் இனத்தவர் கொண்டாடும் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் அறிவித்திருந்த நிலையிலும், தீவிரவாதிகளின்தாக்குதலில் 94 பொதுமக்கள் உள்பட 168 பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் 41 பேர் ராணுவ வீரர்கள். 33 பேர் தீவிரவாதிகள். மேலும் தாக்குதல் சம்பவத்தில் 300 பேர் காயமடைந்தனர்.ரம்ஜானை முன்னிட்டு சண்டைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறை குறையவில்லை. அதாவதுசண்டைநிறுத்தத்திற்கு முன்பு வன்முறை எப்படி இருந்ததோ அதே அளவில் தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது.

முன்னதாக, பிரதமர் வாஜ்பாய் கூறியபடி நவம்பர் 28 ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீரில் சண்டைநிறுத்தம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. சண்டைநிறுத்தத்தை அடுத்தஆண்டு ஜனவரி மாதம் 26 ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் உத்தரவிட்டார்.

இருப்பினும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. சண்டை நிறுத்தம் அறிவித்திருந்த போதிலும் கிரானைடு வெடிகுண்டுத் தாக்குதல்,தற்கொலைப் படைத் தாக்குதல், குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

வன்முறைச் சம்பவங்களில் இறந்தவர்கள் பெரும்பாலும் பொதுமக்களே. அவர்கள் அனைவரும் குண்டுவெடிப்புச் சம்பவங்களிலேயே இறந்தவர்கள்.சண்டைநிறுத்தத்தின் போது கார் குண்டு வெடிப்பு, ராணுவ முகாம் மீது தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் கடந்த ஜூலை 24 ம் தேதி ஹிஸ்புல் முஜாஹிதின் அறிவித்திருந்து சண்டைநிறுத்தத்தின் போது ஏற்பட்ட வன்முறையை விட குறைந்த அளவிலேயேதற்போது வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+