கிராமினிக்கை வெல்வதே லட்சியம் .. ஆனந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விளாடிமிர் கிராமினிக்கை எதிர்த்து விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் மிகவும் சந்தோஷமடைவேன் என்று உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்கூறினார்.

கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் சமீபத்தில் ஈரான் தலைநகர் டெக்ரானில் நடந்த போட்டியில் வெ உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியா திரும்பிய விஸ்வநாதன் ஆனந்தை சென்னையில் அவரது பெற்றோர்கள், மனைவி அருணா ஆகியோர்வரவேற்றனர். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நான் இதுவரை செஸ் விளையாட்டு வீரர் கிராமினிக்கிடம் பேசியது இல்லை.

நான் தற்போது டெக்ரானில் நடந்த போட்டியில் வென்றது பெரிய விஷயமல்ல. கிராமினிக் மிகச்சிறந்த செஸ் விளையாட்டு வீரர். அவரை எதிர்த்துவிளையாடும் அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவரை எதிர்த்து விளையாடும் வாய்ப்புக் கிடைத்தால் மிகவும்சந்தோஷமடைவேன்.

தற்போது என் எதிர்காலத்தைப் பற்றிய திட்டம் எதுவும் வகுக்கவில்லை. இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து செஸ் விளையாடுவேன். ஏனெனில் நான்மிகச்சிறந்த விளையாட்டு வீரராக இருப்பதை விரும்புபவன்.

ஒரு உலக சாம்பியன் எப்போதும் முன்னேற்றத்தை விரும்புவார். நானும் முன்னேற்றத்தையே விரும்புகிறேன். மேலும் செஸ் விளையாடும் போது நான்மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தற்போது எனக்குக் கிடைத்த வெற்றி என்னை ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றார் ஆனந்த்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+