பஸ் கால்வாயில் கவிழ்ந்து 32 பேர் பலி
மணிலா:
பிலிப்பைன்சில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பஸ் இன்னொரு பஸ்சுடன் மோதி கால்வாயில் கவிழ்ந்ததில் 32பயணிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து 960 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பான்சாலன் டவுன் அருகே வந்து கொண்டிருந்த பஸ் எதிரே வந்த இன்னொரு பஸ்மேல் மோதியது. இதையடுத்து மோதிய பஸ் பக்கத்தில் இருந்த கால்வாயில் விழுந்தது.
பஸ், கோட்டபெட்டோ விலிருந்து டாவாகோ நோக்கிச் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. பஸ்சில் மொத்தம் 70 பயணிகள் பயணம்செய்தனர். இவர்களில் 32 பேர் இறந்தனர். பெரும்பாலானோர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து கேள்விப்பட்டதும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில்ஈடுபட்டனர்.
பிலிப்பைன்சில் கிறிஸ்துமஸ் பண்டிகை மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இதனால் கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் ஒன்றாகக் கூடிகிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். இதனால் பஸ்களில் அதிக கூட்டம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()












Click it and Unblock the Notifications