இம்ரான்கான் குடும்பத்தினர் சென்ற விமானத்தில் தாக்குதல்
லண்டன்:
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் குடும்பத்தினர் பயணம் செய்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன விமானத்தில் மனநோயாளியான சகபயணி தாக்குதல் நடத்தினார்.
இம்ரான் கானின் மனைவி ஜெமிமா, தாய், சகோதரர், குழந்தைகள் ஆகியோர் விடுமுறையைக் கழிப்பதற்காக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில்,லண்டனிலிருந்து கென்யா சென்று கொண்டிருந்தனர். விமானம் சூடான் நாட்டின் மீது பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தில் இருந்த பயணி ஒருவர்,விமானியின் அறைக்குள் நுழைய முயன்றார். மேலும் தாக்குதலிலும் அவர் ஈடுபட்டார்.
இதைப் பார்த்த, இம்ரான் கான் மனைவி, மகன்கள் காசிம், சுலைமான் ஆகியோரும் பிற பயணிகளும், பயத்தில் கூச்சலிட்டனர். இதையடுத்துவிமானத்தை செலுத்திக் கொண்டிருந்த பைலட் வில்லியம் ஹாகன், துணை பைலட் ரிச்சர்ட் வெப் ஆகியோர் அந்த பயணியை கட்டுப்படுத்த முயன்றனர்.
சிறிது நேர மல்லுக்கட்டுக்குப் பிறகு பயணிகள் சிலரின் துணையுடன் அந்த நபர் கட்டுப்படுத்தப்பட்டார். அவர் மன நோயாளி என்று தெரிவிக்கப்பட்டது. இந்தவிமானத்தில், பாப் பாடகர் பிரையன் பெர்ரி உள்பட 379 பேர் பயணம் செய்தனர்.
விமானம் வியாழக்கிழமை இரவு லண்டனிலிருந்து புறப்பட்டது. மன நோயாளியின் குழப்பத்திற்குப் பிறகு வெள்ளிக்கிழமை பத்திரமாக கென்யாதலைநகர் நைரோபியில் தரையிறங்கியது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications