300-வது விக்கெட்டை வீழ்த்தினார் முரளிதரன்
Subscribe to Oneindia Tamil
டர்பன்:
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300-வதுவிக்கெட்டை வீழ்த்தினார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கும்,இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டர்பன் நகரில்சனிக்கிழமை துவங்கியது. அப்போதுதான் இந்த சாதனையை முரளிதரன் நிகழ்த்தினார்.
அவரது 300-வது விக்கெட் ஷான் போலக். 300 விக்கெட்டுகளை விரைவாக எடுத்த வீரர்களில் இரண்டாவதுஇடத்தைப் பெறுகிறார் முரளிதரன். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி 55 டெஸ்ட்கள்விளையாடி 300 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முரளிதரனுக்கு இது 58-வது டெஸ்ட்.
300-வது விக்கெட்டுகள் எடுத்துள்ள முதல் இலங்கை வீரர் என்ற பெருமையும் முரளிதரனுக்குக் கிடைத்துள்ளது.உலக அளவில் அவர் 17-வது வீரர் ஆவார்.












Click it and Unblock the Notifications