புலிகளுடன் பேசுவது வீண் .. இலங்கை அமைச்சர்
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் பேசுவது வீணானது என்று நீதித்துறை அமைச்சர் பட்டி வீரக்கூன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், அரசியல் சட்டப்படியே நாம் நடக்க வேண்டும். அப்படிச் செய்தால், விடுதலைப் புலிகள்தனிமைப்படுத்தப்படுவார்கள். இலங்கை அரசு அப்படிச் செய்து விடுமோ என்றுதான் இப்போது புலிகள்பயப்படுகிறார்கள் என்றார்.
இதற்கிடையே, விடுதலைப் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது எனஇலங்கை தொழில் வளர்ச்சி மற்றும் அரசியல் விவகாரத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து தலைநகர் கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நிபந்தனை ஏதும் விதிக்காமல்விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்த இலங்கை அரசு காத்துக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக நார்வேதூதுக்குழுவிடமும் தெரிவித்துள்ளோம்.
பேச்சுவார்த்தை உடனடியாகத் துவங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். பேச்சுவார்த்தை துவங்கி விட்டால்,படிப்படியாக சண்டை நிறுத்தம் குறித்தும் நடவடிக்கை எடுக்க முடியும். நீண்டகாலமாக நீடித்து வரும் சண்டையைஎப்படி நிறுத்துவது என்பது குறித்து அப்போது விவாதிக்க முடியும் என்றார்.
இதற்கிடையே, விடுதலைப் புலிகளின் சண்டை நிறுத்தம் குறித்து இலங்கைத் தமிழர் கட்சிகளிடையே பல்வேறுகருத்துக்கள் நிலவுகின்றன. பெரும்பாலான கட்சிகள், புலிகளின் சண்டை நிறுத்தத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளன.
வட கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும், ஈ.பி.எல்.எப். தலைவருமான வரதராஜ பெருமாள் கூறுகையில்,புலிகளின் சண்டை நிறுத்தம் குறித்து தமிழர் கட்சிகள் அக்கறை காட்டத் தேவையில்லை.
முதலில் பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் ஒப்புக் கொள்ள வேண்டும். சண்டை நிறுத்தம் அறிவிப்பதால் ஒருபயனுமில்லை. தமிழர் பிரச்சினைக்கு உண்மையிலேயே தீர்வு காண வேண்டும் என்ற ஆவல் புலிகளுக்குஇருக்குமானால், மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.
யாழ்ப்பாணம்-வவுனியா முக்கியச் சாலையையும் மக்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக விடுதலைப் புலிகள்திறந்து விட வேண்டும்.
அதேசமயம், டெலோ தலைவர் ஸ்ரீகாந்தா கூறுகையில், புலிகளின் சண்டை நிறுத்தம் குறித்து அரசு சாதகமானமுடிவை எடுக்க வேண்டும். சண்டை நிறுத்தம் சரியானபடி அமல்படுத்தப்பட வேண்டுமானால்,யாழ்ப்பாணத்திலுள்ள ராணுவம் வாபஸ் பெறப்பட வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications