மீண்டும் நீலகிரியில் மலை ரயில்
கோவை:
மழை காரணமாக நீலகிரிக்குச் செல்லும் மலை ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது.
சுற்றுலாத் தளமான ஊட்டிக்குச் செல்ல மேட்டுப்பாளையத்திலிருந்து மலை ரயில் ஊட்டிக்குச் செல்கிறது. சுற்றுலாப்பயணிகள் இயற்கையை கண்டு ரசிக்க இந்த ரயில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது.
மழை காலங்களில் மண்சரிவு ஏற்பட்டு பாதை மூடப்படும் அபாயம் ஏற்படும். இருந்தாலும், இதனை சரிசெய்யப்பட்டு இதுவரை தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி முதல் இந்த ரயில் மழை காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னர் இப்போது மீண்டும்இயக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 7.10 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் ஊட்டிக்கு மதியம் 12 .30 மணிக்குசென்றடையும். இந்த ரயில் மீண்டும் 3 மணிக்குச் சென்று மாலை 8 மணிக்கு மீண்டும் மேட்டுப்பாளையம்வந்தடையும்.
மழையால் நிறுத்தப்பட்ட இந்த ரயில், இப்போது மீண்டும் திங்கள்கிழமை முதல் இயக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
