For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசியல் களத்தில் சாதிக் கட்சிகள்

By Staff
Google Oneindia Tamil News

புதுக் கனவுகளுடனும், புதுக் கணக்குகளுடனும் அரசியல் களத்தில் குதித்துள்ள சாதிக் கட்சிகள் என்ன சாதிக்கப்போகிறது என்பது வரும் தேர்தலில் தெரியவரும். தமிழகத்தில் பெரும் பெரும் அரசியல் கட்சிகளானதி.மு.க.,அ.தி.மு.க, ம.தி.மு.க.,பா.ம.க என அணிவகுத்த போதிலும் சாதிக் கட்சிகள் கலங்காமல் தேர்தலுக்குத்தயாராகிக் கொண்டு தான் இருக்கின்றன.

புற்றீசல் போல முளைத்த இந்த சாதிக் கட்சிகளில் இப்போதே சில கட்சிகள் நீர்க் குமிழிகளைப் போல காணமல்போய் விட்டது. கட்சியை ஆரம்பித்தாலும், அதை தொடர்ந்து நடத்துவதில் இவை தோல்வியைத் தழுவி விட்டதா?அல்லது தேர்தல் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என முடங்கி விட்டனவா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தற்போது தோன்றிய சாதி அடிப்படையிலானக் கட்சிகள் அனைத்தும் பாட்டாளி மக்கள் ஸ்டைலைப் பின்பற்றத்தொடங்கியுள்ளன.

ஆரம்பத்தில் வன்னியர் சங்கமாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சி, அரசியல் கட்சியாக மாறி, கூட்டணி அமைத்து,அமைச்சர் பதவி வரை சென்று விட்டது. இப்போது அது வன்னியர் கட்சி என்ற போர்வையிலிருந்து விடுபட ஊர்ஊராக மாநாடுகளை நடத்தி வருகிறது. இத்தகைய மாநாடுகளின் எண்ணிக்கை 234 ஐ தொட வேண்டும் என்றலட்சியத்தில் அது வெற்றியும் பெற்றது.

எனவே, சாதாரணக் கட்சியாக இருந்து தற்போது மத்திய அமைச்சராகும் வாய்ப்பை பெற்றது அக்கட்சி. இந்தஅடிப்படையில் மாநிலத்தில் ஒரு எம்.எல்.ஏ., ஆனால் கூட போதும் என்ற ரீதியில் ஜாதிக் கட்சிகள் இயங்கத்தொடங்கியுள்ளன.

பெரும் அரசியல் கட்சிகளில் தங்கள் இனத்தவர் இடம் பெற்றாலும், கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டு இவர்கள்வாய் திறப்பதில்லை என இந்த சாதிச் சங்கங்கள் கருதின. மேலும், ஒரு கூட்டமாக இருந்தால் தான் சதாயத்தில்மட்டுமல்ல, அரசு சலுகைகளையும் பெற முடியும் என்பதில் இவை குறிக்கோளாக செயல்பட்டு வருகின்றன.

சாதிச் சங்கங்களை விட ஒரு அரசியல் கட்சியாக உருவாகி விட்டால், கூட்டணியிலிருந்து ஆட்சியிலும்அதிகாரத்திலும் கூட பங்கு பெற்று விடலாம் என்பதில் இவை குறியாக செயல்பட்டு வருகின்றன.

இன்றைய அளவில் தோன்றிய சாதிக் கட்சிகள் அனைத்தும் தேர்தலையே குறி வைத்துள்ளன. தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளே தேர்தலில் "அதிக இடம் என்ற கோரிக்கையை முன் வைத்துதி.மு.க.,வுடன் போராட்டம் நடத்தவுள்ளன.

இந்த நிலையில், தி.மு.க.,வோ சாதிக் கட்சிகளை சற்றும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. எனவே, சாதிக்கட்சிகளைப் போல உள்ள குட்டிக் கட்சிகள் அனைத்தும், அ.தி.மு.க அணியில் இடம் கிடைக்குமா என்பதில்குறியாக உள்ளன.

அதை விட்டால், அடுத்து மதவாதத்தை எதிர்த்து போராடிய தமிழ் மாநில காங்கிரசைத் தலைமை தாங்கச் சொல்லி,தனி அணி சேரலாமா எனவும் சில கட்சிகள் சிந்தித்து வருகின்றன. தங்கள் ஜாதியில் இவ்வளவு பேர் உள்ளனர்,அவர்கள் ஓட்டுப் போட்டால் எங்களுக்கு 80 இடங்கள் வரை கிடைக்கும் என்ற கணக்கையும் போட்டு, பெரும்கட்சிகளிடம் கணிசமான இடங்களை பெற்று தேர்தலில் நின்றால், ஓரிரு இடங்களிலாவது ஜெயிக்கமால்போய்விடுவோமா? என இக்கட்சிகள் கணக்குப் போட்டு பார்த்துக் கொண்டுள்ளன.

எப்படி இருந்தாலும், இந்த தேர்தலில், சாதிக் கட்சிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டு கொள்ளாவிட்டாலும்,"அம்மா வின் ஆசியோ, "ஐயா வின் ஆசியோ கண்டிப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவர்கள்இருவரும் ஆதரவுக் கரம் நீட்டவிலை என்றால், தேர்தலோடு தேர்தலாக இந்தக் கட்சிகள் காணமல் போகலாம்.

முளைத்து 3 இலை விடவில்லை, என்ற ரீதியில் இப்போதே பெரும் கனவில் மிதக்கும் சாதிக் கட்சியாக இருப்பதுபுதிய நீதிக் கட்சி தான். இந்தக் கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம் புது முகமாக உலா வருவதோடு தமிழ செய்தித்தாள்களிலும், டி.வி.,க்களிலும் தலை காட்டுவதில் தவறுவதில்லை.

சென்ற இடமெல்லாம் "பிரஸ் மீட் வைத்து அசத்தி வருகிறார். அத்தோடு விட்டாரா? நாங்கள் எந்தக் கட்சியுடனும்சேர்ந்து கூட்டணி அமைக்க மாட்டோம். வேண்டுமென்றால் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்து கூட்டணிவைத்துக் கொள்ளட்டுமே என்ற ரீதியில் சென்று கொண்டுள்ளார்.

பொறுத்திருந்தால் தெரியும், சாதிக் கட்சிகளின் நிலை. பெரும் கட்சிகள் உதவினால் ஒழிய இவர்கள் பிழைப்பதுகடினமே.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X