தோஷத்தை நீக்க விற்கப்பட்ட குழந்தை
விருதுநகர்:
தோஷத்தை நீக்க பெற்ற குழந்தையை ரூ 500-க்கு விற்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகரில் அகமத் நகரில் திருமண தரகர்வேலை பார்க்கும் பீர் முகமது என்பவர் வாழ்ந்து வருகிறார். இவரது மகள் ஜிம்மா பானு (24). இவருக்கும்,இதே ஊரில் டெய்லர் நகர்தாஸ் தெருவைச் சேர்ந்த ஷாஜகான் என்பவருக்கும் 5 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு வேலைக்குச் செல்லாமல் போதைப் பொருளுக்கு அடிமையாகி ஊர் சுற்றிக் கொண்டிருந்தார் ஷாஜஹான். இதனால் கணவன் மனைவிஇடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது.
ஏற்கனவே 3 முறை கர்ப்பம் தரித்து கர்ப்பம் கலைந்த ஜிம்மா பானு 4-வது முறையாக கர்ப்பமானார். சென்ற நவம்பர் மாதம் 6-ம் தேதிபானுவுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. அதன் பின் அடிக்கடி குழந்தையையும், மனைவியையும் பார்க்க மாமானார்வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார் ஷாஜஹான்.
ரம்ஜான் பண்டிகையின் போது மாமனார் வீட்டிறகு சென்ற ஷாஜஹான் மனைவியையும், குழந்தையுையம் தன் தந்தையின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் .
இரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை 5 மணிக்கு குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே சென்றார் ஷாஜஹான். அவர் குழந்தையைதூக்கிச் செல்வதை பார்த்து சந்தேகம் கொண்டு அருகில் வசிப்பவர்கள் கேட்டதற்கு பள்ளிவாசல் செல்வதாக கூறி சென்று விட்டார்.
தூங்கி விழித்த பானு குழந்தையை காணாமல் திடுக்கிட்டார். குழந்தையைத் தேடியவர்கள் பாரைப்பட்டிக்கு அருகே இருந்த ஷாஜஹானை பார்த்து கேட்டபோது அவர் முன்னுக்கு பின் பதில் கூறவும் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரித்த போது ஷாஜஹான் கூறியதாவது:
எனக்கும் தனது மனைவிக்கும் இடையே நடைபெறும் தகராறு தீர பூஜை செய்ய குழந்தையைப் பலி கொடுக்க வேண்டும் என சந்தானம் என்றஜோசியர் கூறினார். குழந்தையை தர என் மனைவி மறுத்ததால் அவருக்கு தெரியாமல் குழந்தையை எடுத்து சென்று கொடுத்தேன். காலையில்குழந்தையை சந்தானத்திடம் கொடுக்கும் போது அவருட ன் வள்ளியம்மாள் என்ற பெண் வந்திருந்தார். எனக்கு ரூ 500 கொடுத்து குழந்தைக்கு பூஜைசெய்தனர். அதன் பிறகு எனக்கு கஞ்சாவும், பிராந்தியும் கொடுத்தனர். அதை குடித்து நான் தூங்கிவிட்டேன். கண்விழித்து பார்த்த போது அவர்களைகாணனவில்லை என கூறினார்.
குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார் சந்தானத்தை விசாரித்த போது அவர் தன்னிடம் குழந்தையை கொடுக்கவில்லைஎன கூறினார்.
குழந்தை காணாமல் போய் 5 நாட்கள் ஆன பிறகும் குழந்தை கிடைக்காததால் ஜிம்மா பானு சோகத்தில் தவித்து வருகிறார். ஷாஜஹான் முன்னுக்குப்பின்முரணாக கூறி வருவதால் அவர் வேறு யாரிடமாவது குழந்தையை கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications