கடும் பனி: டெல்லியில் விமான போக்குவரத்து ஸ்தம்பிப்பு
டெல்லி:
டெல்லியில் நிலவி வந்த கடும் பனியால் விமான போக்குவரத்து செவ்வாய்கிழமை கடும் பாதிக்கப்புக்குள்ளானது.
டெல்லியில் குளிர் காலத்தில் அதிக அளவில் குளிர் இருப்பதும், கோடை காலத்தில் அதிக வெப்பம் இருப்பதும் வழக்கம். தற்போது நாட்டின் பலபகுதிகளிலும கடும் குளிர் நிலவி வருகிறது. டெல்லியில் தற்போது 5 டிகிரி வெப்பம் நிலவி வருகிறது. இது வரும் நாட்களில் மேலும் குறையக் கூடும்.
கடும் பனி காரணமாக டெல்லியிலிருந்து செல்லும் விமான போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளானது. அமிர்தசரசிலிருந்து வரும் ஏ.ஐ 511-ம்அகமதாபாத்திலிருந்து வரும் 311 விமானமும் ரத்து செய்யப்பட்டது. மேலும் 6 விமானங்கள் தாமதமாக வந்தன.
டெல்லிக்கு வரும் 3 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. வழக்கமான விமான போக்குவரத்து புதன் கிழமை காலை 10 மணி முதல் மீண்டும் துவங்கும்என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications