இந்திய நுழைவாயிலை அழகு படுத்தத் திட்டம்
மும்பை:
மும்பையிலுள்ள இந்தியாவின் நுழைவாயிலை அழகு படுத்த மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளது.
மும்பை நகரவாசிகள் சிலர் தொடர்ந்து போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து நுழைவாயிலைரஅழகு படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
முதலில் மும்பை நகரின் அமைப்பு, தற்போதைய சூழ்நிலை, நெருக்கடியான சாலைகள், பஸ் நிலையங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்ய மகாராஷ்டிரதொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்கள் இது குறித்து அறிக்கைகள் சமர்பித்த பின் அடுத்த மூன்று மாதங்களில் அழகு படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும். குறிப்பாக மும்பையில்உள்ள இந்திய நுழைவாயில் சீர்செய்யப்படும்.
இந்திய நுழைவாயில் 1924 ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின் போது கட்டப்பட்டது. தற்போது அது மிகவும் பாழடைந்த கட்டிடம் போல்காட்சியளிக்கிறது. நுழைவாயிலின் மேற்கூரை, கதவுகள் போன்றவை மிகவும் பாழடைந்துள்ளன. கல்லால் கட்டப்பட்டுள்ள இந்த நுழைவாயிலைஇடித்து விட்டு நவீன முறையில் மாற்றியமைக்கும் திட்டமும் உள்ளது.
மும்பை நகரிலுள்ள அப்பல்லோ பண்டரில் அமைந்துள்ளது இந்திய நுழைவாயில். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை பல்வேறு வைசிராய்கள்,கவர்னர்கள் மற்றும் வெளிநாட்டினர் இந்த நுழைவாயில் வழியேதான் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்தனர்.
கடந்த வருடம் ராஜ்ய சபா உறுப்பினர் பெர்டிஷ் நந்தி, இந்தியாவின் நுழைவாயிலை சீரமைக்கவும், அழகு படுத்தவும் நிதி அளித்தார். இதற்காக மும்பையைகாப்போம் என்று ஒரு நிகழ்ச்சியை நடத்தி அதன் மூலம் பொதுமக்களிடமிருந்து நிதி வசூல் செய்து கொடுத்தார்.
மும்பை நகராட்சி இந்திய நுழைவாயிலை சீரமைக்க ரூ 7 மில்லியன் தேவைப்படும் என்று கூறியுள்ளது. நந்தி, தான் ஒரு மில்லியன் கொடுத்துள்ளார்.இதையடுத்து விரைவில் நுழைவாயிலை சீரமைக்கும் பணிகள் மேற் கொள்ளப்படவிருக்கிறது. நுழைவாயிலில் கண்ணாடியால் அமைக்கப்பட்ட தொங்கிக்கொண்டிருக்கும் சாண்டிலியர் உருவம் சேதமடைந்துள்ளது. இதை மாற்றியமைக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications