துபாய் அரசு விழாவில் பங்கேற்கிறார் நாயுடு
துபாய்:
துபாய் அரசு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அங்கு நடக்கும் தேசிய விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைத்துள்ளனர்.
இந்திய நாட்டைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் ஐக்கிய அரபு நாடுகள் விழாவில் கலந்து கொள்வது வெகு அரிதாக நடக்கக் கூடியநிகழ்ச்சியாகும்.
இதையடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வரும் ஞாயிற்றுக்கிழமை துபாய் செல்கிறார். மேலும் அங்கு நடக்கும் தேசிய விழாவில் கலந்து கொண்டுதுபாய் முதலீட்டாளர்களை தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்யும் வகையில் பேசுவார்.
ஹைதராபாத்தை தகவல் தொழில்நுட்பத் துறையில் மிக முன்னணியில் கொண்டு வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குறித்து துபாய் அதிகாரிகள்,அலுவலர்கள் மிகவும் வியந்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப புரட்சியையே அவர்கள் ஏற்படுத்தி விட்டார்கள் என்று அவர்கள் வியக்கிறார்கள்.
இதுகுறித்து துபாயிலுள்ள இந்திய தூதர் அசோக் முகர்ஜி கூறுகையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு துபாயில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கானபொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் சார்பில் நடக்கும் தேசிய விழாவில் முதன்மை உரையை ஆற்றுவார்.
கடந்த வருடம் துபாய் அதிகாரிகள் உயர் மட்டக் குழு ஒன்றை ஹைதராபாத்துக்கு அனுப்பி எந்தெந்த விஷயங்களில் இரண்டு நாடுகளும் இணைந்துசெயல்படலாம் என்று ஆராய்ந்து வருமாறு கூறியிருந்தது. அந்தக் குழு, ஆந்திர முதல்வர் சந்திர பாபுவை சந்தித்துப் பேசியது. இதையடுத்து சந்திரபாபு நாயுடுகடந்த வருடம் மார்ச் மாதம் துபாய் வந்தார். தற்போது துபாய் அரசு நடத்தும் தேசிய விழாவில் சந்திரபாபு நாயுடுவை பேச அழைத்திருக்கிறது.
துபாய் செல்லும் நாயுடு, ஆந்திர நிதியமைச்சர் மற்றும் தொழிலதிபர்களையும் அழைத்துச் செல்வார். ஐக்கிய அரபு நாடுகளில் அவர், முக்கிய அரசியல்தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார்.
யு.என்.ஐ.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications