தூங்கும் அரசு வெப்சைட்டுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

2000 மாவது ஆண்டில் தமிழக அரசு அலுவலகங்களில் துவக்கப்பட்ட பல வெப்சைட்டுகள் வெற்றி பெறவில்லை.

2000 மாவது ஆண்டில் தமிழகத்தின் பல அரசு அலுவலகங்களில் வெப்சைட்டுகள் துவக்கப்பட்டன. இவற்றில்ஆரம்பத்தில் காணப்பட்ட ஊக்கமும், ஆர்வமும் பின்னாளில் காணப்படாததால் இவை வெற்றி பெறவில்லை.

இதற்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மையும், வெப்சைட்டை பயன்படுத்தியவர்களுக்கு அவர்கள் தேவையைபூர்த்திசெய்யும்விதமாக தகவல் தாரததும் இந்த வெப்சைட்டுகள் வெற்றி பெறாததற்கு காரணம் என கூறப்படுகிறது.

வெப்சைட்டுகளில் புதியதகவல்கள் உடனடியாக தரப்பட வேண்டும். தினந்தோறும் அன்றைய முக்கிய செய்திகள்தரப்பட வேண்டியது மிக அவசியம். ஆனால் பல வெப்சைட்டுகளில் இன்னும் 1999-ம் வருட செய்திகள்தான்காணப்படுகின்றன.

பல வெப்சைட்டுகளின் பெயர்கள் சம்பந்தமே இல்லாமல் இருக்கின்றன. வெப்சைட்டுகளின் பெயர்கள் தேடுவதற்குஏற்றவகையில் எளிதாக இருக்க வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சி வோர்ல்ட் வைட் வெப் என்பதை முதலில் பயன்படுத்திய அரசு அலுவலகம் என பெயர்பெற்றது. சில தொழில் நுட்ப காரணங்களால் திறம்பட செயல்பட முடியவில்லை என சென்னை மாநகராட்சிகூறியுள்ளது.

அதே சமயம் தற்போது மக்களுக்கு பயன்படும் விதமாக பல தகவல்களை பெறும் விதமாக வெப்சைட்டின் தரம்உயர்த்தப்பட்டுள்தாக சென்னை மாநகராட்சியின் கூடுதல் கமிஷனர் ராஜேஷ் லகானி தெரிவித்துள்ளார்.

வெப்சைட்டுகள் திறம்பட செயல்படாமல் இருந்தாலும் வெப்சைட்டுகள் துவக்கப்பட்டு கொண்டு தான்இருக்கின்றன. சில நாட்களுக்கு முன் காவல்துறையினர் தங்கள் வெப்சைட்டை துவக்கியதே இதற்கு ஒரு சான்று.துவக்கப்படும் வெப்சைட்டுகள் புதிய தகவல்களையும், அந்த சைட்டை பார்க்கும் மக்கள் தேவையை பூர்த்திசெய்யும் விதத்தில் செயல்பட்டால் அவை வெற்றி பெறும் என்பது உறுதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+