ஜன.20 ல் ஜார்ஜ் டபுள்யூ புஷ் பதவியேற்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜார்ஜ் டபிள்யூ புஷ் வரும் 20 ம் தேதி பதவி ஏற்கிறார்.

இதையொட்டி நான்கு நாட்களுக்கு விழா நடக்கிறது. இதுபற்றி விழா இயக்குநர் ஜான்சன் பிலிப்ஸ் நிருபர்களிடம்கூறியதாவது:

ஜனாதிபதியாக புஷ் பதவியேற்கும் விழாவையொட்டி வருகிற 18 ம் தேதி தொடங்கி 4 நாட்கள் விழா நடக்கிறது.அமெரிக்க எழுத்தாளர்களுக்கு புஷ் மனைவி லாரா பாராட்டு விழா நடத்தி மரியாதை செய்கிறார்.

அமெரிக்க மக்களின் ஒற்றுமையையும், அமெரிக்க மனோபலத்தையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த விழாநடக்கும். பதவி ஏற்பு விழாவையொட்டி கிறிஸ்தவ தேவாலயத்தில் விசேஷ பிரார்த்தனை நடக்கும். பதவி ஏற்புவிழாவையொட்டிய நிகழ்ச்சிகளில் 35 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் லெபனான் நாட்டைச் சேர்ந்த 48 வயது ஸ்பென்சர் ஆபிரஹாம் மின்சார அமைச்சராகநியமிக்கப்படவிருக்கிறார். அதோடு கிளின்டன் அமைச்சரவையில் வர்த்தக அமைச்சராக இருந்த நார்மன்மினெட்டா என்பவர் போக்குவரத்து அமைச்சராகப் பதவியேற்க உள்ளார் என்றார் பிலிப்ஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+