அரசியல் குழப்பம்: நேபாளம் வர சுற்றுலா பயணிகள் தயக்கம்
காட்மாண்டு:
நேபாளில் பல வருடங்களாக நிலவி வரும் அரசியல் குழப்பம் காரணமாக அந்நாட்டிற்கு வரும் சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
நேபாளில் பல காலமாக அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்ததால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின்எண்ணிக்கை குறைந்திருந்தது. சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின்எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தை பெருமளவு பாதித்துள்ளது.
சென்ற வாரம் பிரபல இந்தி நடிகர் ரித்திக் ரோஷன் நேபாள நாட்டையும் எனக்கு பிடிக்காது. நேபாள மக்களையும்எனக்கு பிடிக்காது என கூறியதாக புகார் எழுந்ததையடுத்து நேபாளத்தில் மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நேபாளின் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தேவ்பா தற்போதைய பிரதமர் கிரிஜா பிரசாத்கொய்ராலாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவெடுத்துள்ளார்.
ஆனால் கொய்ராலா நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பொது ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தார். இதுஅரசியல் விதிகளுக்கு புறம்பானது என தேவ்பா குறை கூறியுள்ளார்.
இது போல் பொது வாக்கெடுப்பது சட்டப்படியும், அரசியில் விதிகளின்படியும் தவறானது. நம்பிக்கையில்லாவாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில்தான் இது போல் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கொய்ராலா கோரியுள்ளார் என தேவ்பா கூறியுள்ளார்.
123 அங்கத்தினர் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் தேவ்பா தனக்கு 56 எம்.பி.களின் ஆதரவு இருப்பதாககூறியிருந்தார். ஆனால் 4 எம்.பி.க்கள் அவருக்கு அளித்த வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு விட்டனர்.
இந்நிலையில் நேபாள அரசுக்கும், பொதுமக்களுக்கும் முக்கிய வருமானத்தை கொடுத்து வரும் சுற்றுலா துறைநலிவடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அரசியல் ஸ்திரதன்மையின்மை தான்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications