சிறையில் விடுதலைப்புலி பிணம்
கொழும்பு:
இலங்கையில் தலைநகர் கொழும்பிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கல்தூவாரா பகுதியிலுள்ள சிறைஒன்றில் இறந்து கிடந்த விடுதலைப் புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில் இறந்து கிடந்தவர் பெயர் சண்முகநாதன் நித்யானந்தம். திரிகோணமலையைச் சேர்ந்தவர். அவரதுஉடலில் பல காயங்கள் இருந்தன.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், சண்முகநாதன் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர்கடந்த ஆகஸ்ட் மாதம் மன்னார் பகுதியில் வெடிகுண்டு வைத்துத் தகர்ப்பதற்காகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே அவர் சிறையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டுஇறந்தாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்தனரா? என்பது குறித்து அவர்கள் விசாரணை நடத்திவருகிறார்கள்.
மேலும் சிறைக்குள் வைத்து, 3 கைதிகள் கொல்லப்பட்டது தொடர்பாக ஒரு சப் - இன்ஸ்பெக்டர், ஒரு ராணுவ வீரர்ஆகியோரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் கோர்ட் வளாகத்தில் வைத்து வக்கீல் ஒருவர்கொல்லப்பட்டார். இதிலும் போலீஸாருக்குத் தொடர்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால், இலங்கையில் நடக்கும் பல்வேறு குற்றங்களுக்கும், போலீஸாருக்கும் தொடர்பு இருக்கும் என்றுபோலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications