ஜாதிக் கட்சிகளுடன் கூட்டணி: மூப்பனார் அறிவிப்பு
சென்னை:
ஜாதிக் கட்சிகளுடன் த.மா.கா. கூட்டணி வைத்துக் கொள்ளும் என மூப்பனார் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பரதன் த.மா.கா. தலைவர் மூப்பனாரை அவரது வீட்டில்சந்தித்து பேசினார். மாநில செயலாளர் நல்லகண்ணு, அகில இந்திய செயலாளர் ராஜா ஆகியோரும் இந்தசந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த சநத்திப்பிற்கு பின் பரதன் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
மூப்பனார் அவர்களிடம் அரசியல் நிலவரம் குறித்து பேசினோம். தேசிய அளவில் மூன்றாவது அணிதேவைப்படுகிறது. எங்கள் அணியில் தி.மு.க. சேராது என நினைக்கிறோம் என கூறினார்.
அதன் பின் நிருபர்களிடம் பேசிய முப்பனார் கூறியதாவது:
கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினேன். இந்த பேச்சு வார்த்தைதொடரும். ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா முடியாதா என்பது குறித்து தேர்தல் கமிஷன்தான் முடிவுசெய்ய வேண்டும்.
ஜெயலலிதா போட்டியிட முடியாது என தேர்தல் கமிஷன் கூறியுள்ளதாக வைகோ கூறியிருக்கிறார். தேர்தல்ஆணையம் அவ்வாறு கூறியதாக தெரியவில்லை.
ஜாதிக் கட்சி என்பது என்ன? அதற்கு என்ன அளவு கோல்? ஜாதிக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கக் கூடாதுஎன்றால் ஜாதியை பின்னணியாகக் கொண்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கக் கூடாது. நாம் ஏற்கனவேஜாதி பின்னணி கொண்ட கட்சிகளை ஏற்றுக் கொண்டுள்ளோம் என கூறினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications