2000 மாவது ஆண்டில் 24 பத்திரிக்கையாளர்கள் படுகொலை
நியுயார்க்:
2000 மாவது ஆண்டில் மட்டும் கொலம்பியா, சியோரா லியோன், ரஷ்யா ஆகிய நாடுகளில் 24 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றுதெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவுதான். கடந்த ஆண்டு உலகம் முழுவதும்கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை 34.
சியோரா லியோனில் 2000 மாவது ஆண்டில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை 3. ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த கர்ட் செஹார்க்,தனியார் தொலைக்காட்சி நிருபர் மோரா ஆகியோர் சியோரா லியோனில் நடந்து வரும் சண்டை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற போதுகொல்லப்பட்டனர்.
பத்திரிக்கையாளர்கள் பெரும்பாலும் கொல்லப்படுவது போர் நடந்து கொண்டிருக்கும் நாடுகளில்தான். அதாவது பிற நாடுகளில் பத்திரிக்கையாளர்கள்முன்விரோதம் காரணமாகவோ அல்லது தாதாக்களைப் பகைத்துக் கொண்டதன் காரணமாகவோதான் கொல்லப்படுகிறார்கள்.
போர் நடந்து கொண்டிருக்கும் நாடுகளில் இரு தரப்பினருக்கிடையே துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது, அந்த சண்டை குறித்து செய்தியை சேகரிக்கச்செல்லும் நிருபர்கள் எதிர்பாராத விதமாகக் கொல்லப்பட்டு விடுகிறார்கள். இது தவிர்க்க முடியாத ஒன்று. மேலும் பல விஷயங்கள் குறித்தானரகசியத் தகவல்களை நிருபர்கள் வெளியிடுவதால் அவர்கள் எதிரிகளின் வேட்டைக்கு இரையாகி விடுகிறார்கள்.
ரஷ்யா மற்றும் கொலம்பியா நாடுகளிலும் இதே நிலைதான் தொடர்கிறது. பத்திரிக்கை நிருபர்கள் மட்டுமின்றி பத்திரிக்கை போட்டோ கிராபர்களும்கொலை செய்யப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.
சோமாலியா, பிலிப்பைன்ஸ், ஸ்ரீலங்கா, உக்ரைன் ஆகிய நாடுகளிலும் பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டு வருவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.இந்தியாவில் பிரதீப் பாட்டியா என்ற போட்டோகிராபர், பாகிஸ்தானில் சுபி முகமது கான் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications