பாஷாவுக்கு சர்க்கரை நோய்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல் உம்மா தீவிரவாதி பாஷா சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார்.
கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷா கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி பாஷா நோன்பு இருந்தார். ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மேலும் அந்த நோயால்அவதிப்பட்டார்.
1992 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக கோவையில் கலவரம் நடைபெற்றது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஷா வழக்கில் ஆஜராக வேண்டும். ஆனால் சர்க்கரை நோயால் அவதிப்பட்டுள்ள பாஷாவால்கோர்ட்டுக்கு வர இயலவில்லை. மேலும் சர்க்கரை நோயால் அவதிப்பட்ட பாஷாவுக்கு சிறையில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications