சென்னையில் விஷ வாயு தாக்கி 3 பேர் பலி
சென்னை:
சென்னையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஏற்பட்ட விஷ வாயுக் கசிவில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் சென்று மூன்று பேரின் சடலங்களையும் மிகுந்த சிரமத்திற்குப் பிறகு மீட்டனர்.
சென்னையை அடுத்துள்ள நெசப்பாக்கம் பகுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியை சனிக்கிழமை 20 மற்றும் 22 மதிக்கத்தக்க இரண்டு வேலையாட்கள்சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று தொட்டியிலிருந்து விஷ வாயு கசிய ஆரம்பித்தது. இந்த விஷ வாயு தாக்கி இரண்டு பேரும் இறந்தனர். அவர்கள் சுத்தம் செய்வதைமேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த பொதுப்பணித்துறை என்ஜினியர் ஒருவரும் விஷ வாயு தாக்கி பலியானார்.
கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, முதலில் ஒருவர் மேல் விஷ வாயு தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதைப்பார்த்துக் கொண்டிருந்த இன்னொருவரும், என்ஜினியரும் அடுத்தடுத்து விஷ வாயு தாக்கி இறந்தார்.
தீயணைப் படையினர் கழிவுநீர்த்தொட்டிக்கு வந்து இறந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டு அவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications