வங்கியில் தில்லுமுல்லு செய்த இருவர் கூட்டணி
கோவை:
கோவையில் ரூ. 350 ரூபாய் டிமான்ட் டிராப்ட்டை 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக மாற்றி, கெமிக்கல் லோடுஎடுத்துச் சென்ற இருவரைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை செல்வபுரம் முத்துசாமி காலனியைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் மொத்தமாக கெமிக்கல்ஸ் மற்றும் சாயப்பொருட்களை விலைக்கு வாங்கி சில்லறையில விற்பனை செய்து வந்தார். இவரது நண்பர் வெங்கடாச்சலம்.இவரும் உதவி வந்தார். இந்நிலையில் இருவரும் பெரிய அளவில் வியாபாரம் செய்ய வேண்டும் என எண்ணினர்.எனவே அதற்கான கொள்தல் தொகையை திரட்ட முடிவு செய்தனர். ஆனால், யாரும் இவர்களுக்கு உதவவில்லை.
எனவே, இருவரும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்குச் சென்றனர். அங்குள்ள ஒரு வங்கயில் ரூ. 350 ரூபாய்க்குஒரு டிமான்ட் டிராப்ட் எடுத்தனர். அதனை எடுத்துக் கொண்டு கோவை வந்தனர். ரூ.350 ரூபாயை 3 லட்சத்து 50ஆயிரம் ரூபாயாக திருத்தினர்.
பின்னர் கோவையில் கணபதி என்ற இடத்தில் இருந்த சாயப் பொருட்கள் மொத்த வியாபார நிறுவனத்திற்குவந்தனர். அங்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயக்கான டி.டி யைக் கொடுத்து விட்டு ஒரு லாரியில் 90 ஆயிரம்ரூபாய்க்கான பொருட்களை ஏற்றிச் சென்றனர்.
இதன் பின்னர் டி.டியை மொத்த வியாபாரம் செய்து வரும் உரிமையாளர் வங்கியில் செலுத்தினார். அப்போதுவங்கியில் இருந்த அலுவலர் இதனை சரி பார்த்தார். அப்போது அதில், வங்கி பெரிய தொகைக்கு வங்கியின்கேஷியர் மட்டும் கையெழுத்திட்டுருந்ததைக் கண்டு பிடித்தனர்.
இது குறித்து உடனடியாக வியாபர நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர் டி.டியைப் பெற்று போலீசில் புகார்தெரிவித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து காமராஜ் மற்றும் வெங்கடாச்சலத்தை கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications