கேரளாவில் நிலநடுக்கம்: உயிர்ச்சேதம் இல்லை
திருவனந்தபுரம்:
கேரளாவில் தெற்குப் பகுதியில் உள்ள சில மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்தன. தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட அதே 8.15மணிக்கு 4.8. ரிக்டர் அளவில் கேரளாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து 8.57 மணிக்கு 3.3. ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம்ஏற்பட்டது.
இடுக்கி மாவட்டத்திலுள்ள வண்டிப்பெரியார், பீருமேடு ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 வினாடிகள் வரை நிலநடுக்கம் நீடித்தது.
எர்ணாகுளம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த பெண்கள் பலர் காயமடைந்தனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி ஓடஆரம்பித்தனர்.
பூகோள ஆராய்ச்சியாளர் கங்காதரன் கூறுகையில், 2000 மாவது ஆண்டில் ஏற்படும் முதல் நிலநடுக்கம் இதுவே. உயிர்ச்சேதம் எதுவும்ஏற்படவில்லையென்றாலும் அதிக அளவில் பொருட்சேதம் ஏற்பட்டது உண்மை. கடந்த டிசம்பர் மாதம் 12 ம் தேதி இதே போல் நிலநடுக்கம்ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது என்றார்.
தலைநகர் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினாம்பட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்கள் நிலநடுக்கத்தால்பாதிக்கப்பட்டன.
இந்த நிலநடுக்கத்தின் போது 1000 க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பம்பா ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை.அவர்கள் இந்த நிலநடுக்கம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
நெடுங்காண்டம், கோட்டயம் ஆகிய நகரங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறி ஓட ஆரம்பித்தனர். டிசம்பர் 12 ம்தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட இந்த முறை நிலநடுக்கத்தால் அதிக அளவில் சேதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications