அ.ச.ஞானசம்பந்தத்திற்கு குறள் பீட விருது
சென்னை:
2000-மாவது ஆண்டுக்கான குறள் பீட விருது பழம் பெரும் தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தத்திற்குவழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரூ. 2 லட்சம் பரிசுத் தொகை கொண்டது இந்த விருது. முதல்வர் கருணாநிதி தலைமையிலான செயற்குழுஉறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை கூடி விருதுக்குரியவரைத் தேர்வு செய்தனர்.
குறள் பீட விருதுக்குப் பிற பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம்:
ஈரோடு தமிழன்பன் (கவிதை), மனவை முஸ்தபா (அறிவியல்), டி.லூர்து (நாட்டுப்புற் கலை), சேஷநாராயணா(மொழிபெயர்ப்பு), இளவேனில் (ஆய்வு). இந்த விருதுகள் தலா ரூ. 25,000 பரிசுத் தொகை கொண்டது.
குறள் பீட பாராட்டிதழ் பெற 7 தமிழறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ. 5000 பரிசுத் தொகைவழங்கப்படும்.
ஜனவரி 15-ம் தேதி தமிழக அரசின் சார்பில் நடைபெறும் திருவள்ளுவர் தின நிகழ்ச்சியின்போது இந்த விருதுகள்வழங்கப்படும்.
விழாவின்போது, கருணாநிதி எழுதிய தென்பாண்டிச் சிங்கம் மற்றும் மு.வ எழுதிய கரித்துண்டு ஆகிய நூல்களின்ஆங்கில, இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிபெயர்ப்புகள் வெளியிடப்படும்.
அரசு அங்கீகரித்த திருக்குறள் செம்பதிப்பும் அதே நிகழ்ச்சியின்போது வெளியிடப்படும் என்று அரசு வெளியிட்டசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications