3 வது பெரிய கட்சி பா.ம.க...ராமதாஸ்
கோவை:
தமிழகத்தில் 3வது பெரிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். வாழப்பாடிக்கும் எனக்கும் உள்ள பிரச்னை குறித்து மனம் நொந்து 10 முறைகூட்டணிக் கட்சிகளின் தலைவர் கருணாநிதியிடம் முறையிட்டு விட்டேன். இது வரை அவர் நடவடிக்கை எடுக்காதது ஏன் எனத் தெரியவில்லை எனராமதாஸ் தெரிவித்தார்.
நீலகிரி மற்றும் கோவையில் நடந்த தொகுதி மாநாட்டில் பங்கேற்க வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
வாழப்பாடி ராமமூர்த்தியின் கட்சியில் ஒரு எம்.எல்.ஏ.,எம்.பி., கூட கிடையாது. எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து மனநொந்த நிலையில் 10 முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழகத் தலைவர் என்ற முறையில் முதல்வர் கருணாநிதியிடம் முறையிட்டேன்.
ஆனால், அவரோ என்னுடைய பிரச்னைகளை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. இது குறித்து எழுத்துப் பூர்வமாகக் கூட 3 முறை கடிதம் எழுதிவிட்டேன். இதற்கு மேல் பிரச்னையைப் பெரிதுபடுத்தக் கூடாது என நினைத்து விட்டு விட்டேன்.
தமிழகத்தில் 3 வது பெரிய கட்சியாகப் பாட்டாளி மக்கள் கட்சி உருவாகியுள்ளது. அ.தி.மு.க அணியில் இடம் பெற எனக்கு எந்த தூதும் இதுவரைவரவில்லை. தமிழகத்தில் 3வது அணி உருவாக வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்த அணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம் பெறாது.
அரசு அலுவலகங்களில் 6 நாட்கள் வேலை நடக்க வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பம். சனிக் கிழமைகளில் மக்கள் நலத்திட்டங்களை வைத்துக் கொண்டால், மற்ற நாட்களில் பாதிக்கப்படாது.
ஆண்டிமடம் தொகுதியில் வேட்பாளர் அறிவித்துள்ளேன். இதற்குக் காரணம் ஏற்கனவே அங்கு தனித்து நின்று வெற்றி பெற்றது தான். எனவேகர்வத்தினால் அங்கு நான் வேட்பாளரை அறிவிக்கவில்லை. கடந்த முறை அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து 40 இடங்களில் போட்டியிட்டு 30 இடங்களில்வெற்றி பெற்றோம். தி.மு.க.,வுடனான கூட்டணியில் 40 இடங்களில் போட்டியிட்டு 26 இடங்களைப் பெற்றோம்.
தமிழகத்தில் 60 கட்சிகள் உள்ளன. இதில் யார் வேண்டுமானாலும், நாங்கள் ஆட்சி அமைப்போம் எனக் கூறிக் கொள்ளலாம். பாட்டாளி மக்கள்கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தலைவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதே கூட்டணியில்தொடர்ந்து நீடிப்போம்.
நீலகிரி தேயிலை பிரச்னை குறித்து அடுத்த மாதம் 7 மற்றும் 8 ம்தேதிகளில், அங்குள்ள 6 தாலுகா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்நடத்தவுள்ளோம். இதில் அனைத்துக் கட்சியினரும் கலந்து கொள்வர். தேயிலை இறக்குமதி வரியை 150 சதவீதம் உயர்த்த வேண்டும். ஏல மையங்களில்குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ. 60 நிர்ணயிக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில், போக்குவரத்து மற்றும் மருத்துவமனை வசதிகளைமேம்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்படும் என்றார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications