சங்கு ஊதினால் தப்பா? .. காவல் நிலையம் முற்றுகை
கோவை:
உடுமலைப்பேட்டை அருகே சங்கு ஊதியவரைத் தட்டிக் கேட்ட போலீசைக் கண்டித்து, பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் இறங்கினர். காவல் நிலையத்தைமுற்றுகையிட்டு, சாலை மறியில் செய்தனர்.
கோவை மாவட்டம், உடுமலைப் பேட்டை அருகே உள்ள குமாரலிங்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (58). இவர் மார்கழி மாதத்தையொட்டிஅதிகாலையில் சங்கு ஊதி, மணியடித்துக் கொண்டு வந்தார். அப்போது இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது எனக் கூறி, அவரை ரோந்து பணியில்இருந்த ஏட்டு கோட்டை சாமி தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அறிந்த மக்கள் திடீரென ஒன்றாகக் கூடினர். அதிகாலையிலேயே குமாரலிங்கம்-பழனி ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர்.ஏட்டு கோட்டை சாமி மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி, போலீஸ் ஸ்டேஷனையும் முற்றுகையிட்டனர். இந்த சம்பவத்தையடுத்து குமாரலிங்கத்தில்பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications