ஜன. 24 ல் மக்கள் தமிழ் தேசத்தின் பொதுக்குழு கூடுகிறது
சென்னை:
வரும் ஜனவரி 24 ம் தேதி மக்கள் தேசம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூடி கட்சியின் கொள்கைகள் மற்றும்சட்டசபைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்று கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கண்ணப்பன்தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் அவர் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
மக்கள் தமிழ் தேசம் கட்சி தற்போது யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை. தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டால் கண்டிப்பாக ஆட்சியில் பங்கு கேட்கும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியும், அ.தி.மு.க.வும் தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தனி ஆட்சியேஅமையும் என்று கூறி வருகிறார்கள். இது தவறான கணிப்பு. தமிழகத்தில் கண்டிப்பாக கூட்டணி ஆட்சியேஅமையும். தமிழகத்தில் 3 வது அணி அமையும் வாய்ப்பும் இல்லை.
பிப்ரவரி மாதம் முதல் தேர்தல் பிரச்சாரம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். 184 தொகுதிகளில் முதல் கட்டமாகபிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 144 அடியாக உயர்த்த வேண்டும். அப்போது தான் தமிழகத்தின்தென் பகுதிகளில் விவசாயத்திற்கு இது உதவிகரமாக இருக்கும். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளஅரசு மத்திய அரசு நியமித்த நிபுணர்கள் குழுவின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்கண்ணப்பன்.
யு.என்.ஐ.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications