ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் ஆருத்ர விழா

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் ஆருத்ர தரிசன விழா நடைபெற்றதையொட்டி சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் ஆருத்ர தரிசனம் நடைபெற்று வருகிறது. அது போல் இந்தஆண்டுக்கான விழாவும் நடந்தது.

முன்னதாக இரவு 8.30 மணிக்கு நடராஜர் - வாரனாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. அதிகாலை 3 மணிக்கு மேல் யாகம்நடத்தப்பட்டது. பின்பு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை ஆகியவை நடந்தன.

நிகழச்சியில் ஏராளமான பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் 6 மணிக்கு மேல் அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. திருவாதிரைநோன்பை முன்னிட்டு பெண்கள் தங்களது தாலி பாக்கியம் நிலைக்க விரதம் இருந்து வழிபட்டனர்.

ஈரோடு திருவேங்கட சாமி வீதியில் உள்ள மகிமாலீஸ்வரர் கோவிலிலும் ஆருத்ர தரிசனம் நடைபெற்றது. அதையொட்டி சிவாச்சாரியார்கள் சரவண சிவம்,கணேச சிவம் ஆகியோர் நடன ஒளி விளக்கேற்றி ஆடினார்கள். அப்போது ஆனந்த நடன வழிபாடு நடந்தது. லட்சார்ச்சனை அபிஷேகமும் நடைபெற்றது. பின்புசுவாமி சிற்றம்பலம் சென்றடைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+