ஸ்பைட் மீது தேச துரோக வழக்கு ... விசாரணை ஒத்திவைப்பு
சுவா:
பிஜியில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள கலகக்கும்பல் தலைவர் ஜார்ஜ் ஸ்பைட் மற்றும் அவரதுஆதரவாளர்கள் மீது தொடரப்பட்டுள்ள தேசதுரோக வழக்கு விசாரணை வரும் ஜனவரி 24 க்குஒத்திவைக்கப்பட்டுள்ளது
ஜார்ஜ் ஸ்பைட் மீது தொடரப்பட்ட வழக்கு வியாழக்கிழமை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சேலாசி முன்னிலையில்விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் 114 பேரிடம் சாட்சியங்கள் வாங்கப்பட வேண்டும். ஆனால் சாட்சிகூறுபவர்கள் அனைவரும் விசாரிக்கப்படாததால் வழக்கு விசாரணைக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படும்.
இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த லேசியா தனது தீர்ப்பில்,இவ்வழக்கில் சாட்சியங்கள் இன்னும் விசாரணை செய்து முடிக்கப்படாததால் இவ்வழக்கு வரும் ஜனவரி மாதம் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, கடந்த மே மாதம் 19 ம் தேதி பிஜியில் பிரதமர் மகேந்திர செளத்ரியை கலகக்கும்பல் தலைவர் ஜார்ஜ்ஸ்பைட் தலைமையிலான கலகக்கும்பல் சிறை வைத்தது. பிஜியில் பூர்வ குடிமக்கள் தான் பிரதமராக இருக்கவேண்டும். வேறு நாட்டவர் பிஜி தீவு பிரதமராக இருக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தியது.
இதையடுத்து ராணுவ வீரர்களுக்கும், கலகக்கும்பலுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்துபிஜியில் சிறைவைக்கப்பட்டிருந்த மகேந்திர சவுத்ரி விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து ஜார்ஜ் ஸ்பைட் கைதுசெய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் சிலரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications