ஒரே நேரத்தில் 2 பெண்களை மணந்த வாலிபர்
கோலாலம்பூர்:
மலேசியாவில் வாலிபர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டார்.
அவர் பெயர் அப்துல் மொயின் ஹமிது (41). இவரை சுஹைதா (23) மற்றும் ரோஹாயா ரோமில் (25) என்றஇரண்டு பெண்கள் காதலித்தனர்.
அப்துல் அடிப்படையில் வேன் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். சுஹைதாவும், ரோஹாயாவும் நல்ல தோழிகள்.இவர்கள் இருவரும் இந்த வேனில் பயணம் செய்து தங்கள் வேலைக்குச் செல்வார்கள். அப்போதுஇவர்களிடையே காதல் ஏற்பட்டது.
இரண்டு பேரும் அப்துலைக் காதலித்தனர். ஆனால் இது இருவருக்கும் தெரியாது. இதைத் தெரிந்து கொண்டஅப்துல் இருவர் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. இதனால் இரண்டு பெண்களையும் திருமணம் செய்துகொள்ள நினைத்தார். இதற்கு நல்ல தோழிகளான இருவரும் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து கோலா நெராங் கிராமத்தில் உள்ள அப்துலின் வீட்டில் அவருக்கும், இரண்டு பெண்களுக்கும்திருமணம் நடந்தது. இந்தத் திருமண விழாவில் 4000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணமக்களைவாழ்த்தினர். மலேசியாவில் முஸ்லீம் மதச் சட்டப்படி ஒரு ஆண் 4 பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
மணப்பெண்கள் இரண்டு பேரும் கூறுகையில், ஒரே ஆணைத் திருமணம் செய்து கொள்வதில் எங்களுக்கு எதுவும்பிரச்சனையில்லை என்றனர். அப்துல் கூறுகையில், இரண்டு பேருக்கும் தனித்தனி வீடு வாங்கிக் கொடுப்பதாகவும்,இரண்டு பேரையும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சந்திப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளதாகக் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications