தர்மபுரியில் 2 நக்சலைட்டுக்கள் கைது
தர்மபுரி:
தர்மபுரியில் நக்சல் தலைவரின் நினைவுநாளைக் கொண்டாட முயன்ற இரண்டு நக்ஸலைட்டுக்களைப் போலீஸார்கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே பெருங்காட்டுக்கொட்டாய் பகுதியில் கடந்த ஜனவரி 10 ம் தேதிபோலீஸாருக்கும், நக்ஸல் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் நக்சல் தலைவர் ரவீந்திரன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ரவீந்திரனின் முதலாம் ஆண்டு நினைவு தினம்புதன்கிழமை அனுசரிக்கப்படுவதால் தர்மபுரி மாவட்டத்தில் நக்சலைட்டுக்களால் ஆபத்து வரலாம் என்றுகருதப்பட்டது.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டது. இதற்கிடையே புதன்கிழமை காலைக்யூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீஸார் பலர் தர்மபுரி பஸ் ஸ்டான்ட் அருகேரோந்து சுற்றிக் கொண்டு வந்தனர்.
அப்போது போலீஸாரைக் கண்டதும் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரைப் போலீஸார் கைதுசெய்தனர். அவர் பெயர் சின்னசாமி (20). நக்சல் அமைப்பைச் சேர்ந்தவர். சோளக்கொட்டாய் பள்ளயில் துப்பாக்கிபெற்றோர் - ஆசிரியர் கழகத்தினரைத் துப்பாக்கி முனையில் மிரட்டியவர் என்பது தெரிய வந்தது.
நக்சல் அமைப்புத் தலைவர் ரவீந்திரனின் நினைவு நாளை முன்னிட்டு நக்சல் ஆதரவாளர்களை சந்திக்க வந்த போதுபிடிபட்டார். இதே போல் நாய்க்கன்கொட்டை அருகே ரோந்து சென்ற போது நக்சல் சஞ்சீவன் (19) என்பவர்பிடிபட்டார். விசாரணையில் ரவீந்திரன் நினைவு நாளை முன்னிட்டு முக்கியத் தீவிரவாதிகளின் அழைப்பின் பேரில்அவர் தர்மபுரி வந்ததாக ஒப்புக் கொண்டார் என்று தெரிய வந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications