ஆயுட்கால தடையை எதிர்த்து அசார் வழக்கு
மும்பை:
மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு இந்திய கிரிக்கெட் அணியின்முன்னாள் தலைவர் முகமது அசாருதீனுக்கு ஆயுட்கால தடை விதித்து இந்தியகிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் தீர்ப்பளித்திருந்தது. . இந்த தடையை எதிர்த்துஅசாருதீன் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளார்.
கிரிக்கெட் மேட்ச் ஃபிக்சிங் தொடர்பாக விசாரித்த சி.பி.ஐ. இந்திய கிரிக்கெட்அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன்,முன்னாள் வீரர் அஜய் சர்மா, மனோஜ்பிரபாகர், அஜய் ஜடேஜா. நயான் மோங்கியா ஆகியோர் மீது குற்றம் சுமத்தியது.
இந்த குற்றச்சாட்டை விசாரிக்க சி.பி.ஐ.-ன் முன்னாள் இணை இயக்குனர் மாதவனைநியமித்தது. மாதவன் அறிக்கையின் படி நயான் மோங்கியா தவிர மற்ற நால்வரும்மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
மாதவன் அறிக்கையினடிப்படையில் அசாருக்கும், அஜய் சர்மாவுக்கும் ஆயுட் காலதடையும், பிரபாகர், ஜடேஜா இருவருக்கும் 5 ஆண்டு கிரிக்கெட் விளையாட தடையும்விதித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது.
தற்போது தன் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து அசார் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறார். ஆனால் இது நீதிமன்றத்தில் வெற்றி பெறுமாஎன்பது தெரியவில்லை.
இது குறித்து இந்திய அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கருத்து தெரிவிக்கையில்,அசாருதீன் மீது விதிக்கப்பட்டுள்ள தடை கோர்ட்டில் செல்லுபடியாகாது எனதெரிவித்தார்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர்தெரிவிக்கையில், கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டக்காரர்களுடன் தொடர்பில்லை எனஎவ்வாறு கூற முடியும். கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுக்கும் முன் சட்டநிபுணர்களான கபில் சிபால், அசோக் சிங்கால் ஆகியோரிடம் ஆலோசனை பெற்றபின்பே முடிவெடுத்த்து என தெரிவித்தார்.
இது குறித்து மும்பை வழக்கறிஞர் சதீஷ் மானேஷின்டே கூறுகையில், கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரியத்துடனான ஒப்பந்தத்தை மீறியாதாக கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியம் கருதினால் அவர்களுக்கு கிரிக்கெட் வீரர்களுக்கு ஆயுட்கால தடை வழங்கும்உரிமை உண்டு.
அசாரிடம் வருமானத்திற்கு அதிகமான சொத்து இருந்தால் அது குறித்து நீதிமன்றம்அவரை விசாரிக்கும். அவர் சொத்து விவரம் குறித்து தெரிவிக்க வேண்டும் எனவற்புறுத்தப்படுவார் என கூறினார்.
அசாருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து முறையிட என்த விதமான சட்டபூர்வமான முறையும் இல்லை என கிரிமினல் வழக்கறிஞர் வக்கீல் என்பவர் கருத்துதெரிவித்துள்ளார்.
அசாருதீனின் மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா? ஏற்றுக் கொண்டாலும்அசாருதீன் வெற்றி பெறுவாரா? என்பவை கேள்விக்குறியாக உள்ளன. இருப்பினும்கிரிக்கெட் மேட்ச் ஃபிக்சிங்கில் மற்றொரு அத்தியாயம் துவங்கி இருக்கிறது.
யு. என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications